பக்கம்:மறைமலையம் 15.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

❖ 15❖ மறைமலையம் – 15

அறிவுஞ் செயலும் ஏனை யான் மாக்களிடத்துங் காணப்படுதல் வேண்டும்.அங்ஙனமின்றி அவை ஒவ்வொருவரிடத்தொவ்வொரு வாறாய்ப் பலதிறப்பட்டு நிகழக் காண்டலால் ஆன்மா ஒன்றென்னுமுரை ஒருசிறிதும் பொருந்தாது. அற்றன்று, சலத்தின் அசைவாற் சந்திர விம்பமும் அசைவதுபோற் றோன்றினும் சந்திரனுக்கு அவ்வசைவு வராமை போலச், சரீரத்தின் வினைகளாற் சரீரத்தி னுள்ளிருக்கும் ஆன்மாத் துடக்குறுதல் போற் றோன்றினும் ஏகனாகிய அவ்வான்மா வுக்கு இயற்கையில் அவ்வினைத் துடக்கு இல்லையா மெனின்;-- ஈண்டு இவ்வுவமை பொருந்தாது. ஆன்மாவின் சையோக மின்றி உடம்பு ஒருவினை செய்ய அவ்வினை ஆன்மாவின்கட் பற்றுவதாயினன்றே சலத்தின சைவையும் அது பற்றுஞ்சந்திர விம்பத்தையும் அவ்வா றுவமை கூறலாம்? ஆன்மசையோக மில்லாவுடம்பு சிறிதாயினும் பிணவுடம்பின் கண் வைத்து

வினையின்றிக்கிடத்தல்

இனிதறியப் படுதலால்,

உடம்பினால் ஆன்மாத் துடக்குறுமென்றல் யாங்ஙனம் பொருந்தும்? இ துண்மை யானுணர்ந்த சைவ சித்தாந்த முதலாசிரியர்,

"அவ்வுடலினின் றுயிர்ப்ப வைம்பொறி கடாங்கிடப்பச் செவ்விதினவ்வுடலிற் சென்றடங்கி--அவ்வுடலின் வேறொன்று கொண்டு விளையாடி மீண்டதனை மாறலுடனீயல்லை மற்று’

“கண்டறியு மிவ்வுடலே காட் டொடுங்கக்காணாதே உண்டிவினை யின்றி யுயிர்த்தலாற்-- கண்டறியு முள்ளம்வேறுண்டா யொடுங்கா துடனண்ணி லுள்ளதா முண்டிவினை யூண்'

என்றருளிச் செய்தார். நாலடியாரிலும்.

“நார்த் தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தெடுக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன் புறப்பட்டக்கால்'

என்றிவ்வுண்மை தெருட்டப்பட்டது

காண்க.

ஆகவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/219&oldid=1583274" இலிருந்து மீள்விக்கப்பட்டது