இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* முன்பனிக்கால உபந்நியாசம்
187
உடம்பினைத் தொழிற் படுத்துவ துயிரேயல்லது உயிரினைத் தொழிற்படுத்துவது உடம்பன்றாம் அன்றாக, உயிர்கள் பலவாயும், பலதிறப்பட்ட வினைப்போகங்களுடையவாயும் இருக்குமென்பது கரதலாமலகம்போற் பெறப்படுவதாம். ஆதலால், அவர் கூறும் ஏகான்மவாதம் ஒரு சிறிதும் பொருந்தாது.