188
கன்மம்
மிக்க
அற்றேலஃதாக, இனி உயிர்கட்குக் கன்மமுண் டென்பது எவ்வாறு துணியப்படுமெனின்;-- தாய் வயிற்றிற் கருக் கொண்டு பிறக்கும் மகவு எவ்வகைக்குற்றமு முடையதன்றாகவும், ஒன்று தான் பிறந்த குடும்பத்தால் மிகவறுமைப் பட்டுப் பெருந்துன்ப மெய்துதலும் ஒன்று தான் பிறந்த குடும்பத்தால் செல்வவளம் பொருந்தி இடையறாது இன்பந்துய்த்தலும், ஒன்று நல்லறிவுடைய தாய்ப் பலராற் பாராட்டப்படுதலும் ஒன்று தீயவறிவுடைய தாய்ப் பலரால் இகழப் படுதலும், ஒன்று கலையறிவு நிரம்பிப் பெரிய வித்துவானென மதிக்கப்படுதலும் ஒன்று அஃதின்றிச் சுத்த மூடனென அவமதிக்கப் படுதலும், என்னையென்று சிறிது ஆராயப்படுமாயின், இவ்வகையான பலபேதங்களுக் கெல்லாம் இன்றியமையாத காரணம் ஒன்றிருத்தல் வேண்டு மன்றே? அக்காரணந்தான்
த
யாதோவெனின், ஆன்மாக் களுக்குப் பண்டுதொட்டே அமைந்து கிடந்த கர்மமே யல்லது பிறிதில்லையென்க. இவ்வுண்மை யுணர்ந்தே பெரியாரும்,
“பேறிழ வின்பமோடு பிணிமூப்புச் சாக்காடென்னும் ஆறுமுன் கருவுட்பட்ட தவ்விதி யனுபவத்தா லேறிடு முன்புசெய்த கன்மமிங் கிதனுக்கேது தேறுநீ யினிச்செய்கன்ம மேலுடற் சேருமன்றே”
என்று அருளிச் செய்தனர்.