189
முற்பிறவி பிற்பிறவி
L
ச்
னி இப்பிறவியில் நிகழும் நிகழ்ச்சிகொண்டே ஆன்மாக்கட்கு முற்பிறவியும் பிற்பிறவியு முண்டென்பது துணியப்படும். இன்று இவ்வுபந்நியாச சபை கூட்டப்பட்ட நிகழ்ச்சி யெல்லாம் இதற்கு முற்பட்டநாளில் யாம்செய்த சயல்களின் பயனாம் அல்லவோ? இன்றுசெய்யும் இவ்வுபந் நியாச முயற்சிகளெல்லாம் இனிவரும் நாள்களில் இ சைவசித்தாந்த மகாசமாஜம் மிகவுந் தழைத்தோங்கவும் அதனால் நாம் ஞானவின்பானுபவ மெய்தவும் பயன்படும் அல்லவோ? இதற்கு முன்நாட்களில் தன்றேகத்தின் கூறுபாடறிந்து அதற்கியைய உண்ணும். உணவின் வரை கடந்து வேறுபல புதிய உணாக்களைத் தான் வேண்டுமட்டும் புசித்தான். சித்தான். ஒருவன் அப்போது அதன்பயன் அறியாது பின் பத்துநாட் கழித்து இன்று வயிற்று நோயால் வருந்தும் போது இது முன் வரம்புகடந் துண்டவுணவால் வந்த தென்றறியாது “இஃது எனக்கு எங்ஙனம் வந்தது? எங்ஙனம் வந்தது?" என்றெண்ணி எண்ணித் துயர் உறுகின்றான். பின் மருத்துவனை வருவித்து மருந்து ஊட்டப் பெறுங்கால் அவ்வூட்டப் பெற்ற அக்கணத்தே யாயினும் அன்றி அந்நாளே யாயினுஞ் சுகம்பிறவா விடினும் அஃதுண்டபிற் கணத்தேனும் பின்னா ளேனும். நோய்தீர்ந்து சுகமெய்தல் கண்டாமன்றே? இங்ஙனமே யாம் இப்பிறவியில் இன்ப துன்பம் நுகருங்கால் இப் பயன்களைத் தந்த வினைகள் முற் பிறவியில் அமைந்து கிடந்தன வென்பதனை மறந்தோமாயினும், அவை உளவாதல் ஒருதலையேயாம். இனிமுற்பிறவியிற் செய்த தீவினைகளால் இப்பிறப்பில் எய்துந் துன்பங்களை ஞானவொழுக்கத்தாலும் பக்தி யொழுக்கத்தானுந் துடைத்துக் கொண்டால் இனிவரும் பிறவியில் இன்புறுதல் ஒருதலை யாமன்றோ? அற்றேலஃதாக, முற்பிறவியிற் செய்தவினை