பக்கம்:மறைமலையம் 15.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

இப்போ

மறைமலையம் – 15 தொருசிறிதாயினும்

மறதி

நாளையிருப்பவை

நினைவுசெயக் நி கூடவில்லையேயெனின்; நன்று சொன்னாய், நேற்றிரவு கறித்த கறியுங்குழம்பும் நுங்கள் வீட்டில் யாவை? என்று உசாவினால் அவற்றை மறந்து விடைபகரத் தெரியாமல் விழிப்பார் நம்முள் எத்தனைபேர் உளர்! நேற்று நீங்கள் காலை முதல் மாலை வரையிற் செய்தன வெல்லாம் சொல்லுக வென்றால் அது சொல்லத் தெரியாது விழிப்பார் எத்தனைபேர் உளர்! அஃதிருக்க, முற்றும் நினையப்படா விடினும் முன்நாளிற் செய்த சிலவற்றையேனும் பின்நாளில் நினைகின்றாமே யெனின்;-- நீவிர் குழவிப்பருவத்துச் செய்தன ஒருசிலவேனும் இம்மனிதப் பருவத்து நினைக்க மாட்டாமல் முழுதும் மறக்கின்றமையால் 'யான் குழவியாயி ருந்திலேன்' எனக்கூற அமையுமோ? காலம் நீள நீள மறதியும் நீளும்; காலத்தினாற் றோன்றும் கணக்கிறந்தன. இன்றைக் கிருந்த ஒருபொருள் நாளை அவ்வாறே காணப் படுவதில்லை; முற்றைநாட் காணப் படுவதில்லை. ஆ! காலத்தினாற் சிறிது வேறு படும் புதுமைகள் என்னே! என்னே! ஒருவனைக் குறித்த பருவத்தில் வைத்துப் பிடித்த படமும், மனிதப் பருவத்தில் வைத்துப் பிடித்த படமும், முதுமைப் பருவத்தில் பிடித்த படமும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், அம்மூன்று உருவும் மூன்று வேறு மனித வுருக்களாய்த் தோன்றுமே யல்லது ஒன்றாய்த் தோன்றா. ஆ ஒவ்வொரு கணமும் மனத்தினுங் குறிக்கப்படாத அதிவேகத் துடன் எத்தனை எத்தனை மாறுதல்கள் நிகழ்கின்றன! அன்பர்காள்! எம்மருமைச் சகோதரர்காள்! இப்பூகோள மானது ஒரு நொடியில் பதினெட்டரைமைல் விழுக்காடு ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து நூற்றுப்பத்துமயில் தூரம் சுழன்று செல்வதைப் பாருங்கள்! இவ்வளவு வேகமாய்ச் சென்றும் இதன் இயக்கமும் மாறுதலும் நமக்குப் புலப்படுகின்றனவா? இல்லையே. இங்ஙனம் ஒவ்வொருகணமும் மனத்தினும் மிக்குச் செல்லும் பெருவேகத்துடன் நடைபெறும் மாறுதல் களின் இயல் புணர்ந்தே பௌத்தரிற் கணபங்கவாதிகளென ஒரு சாரார் தோன்றினர். சூறைக்காற்றினிடையிலகப் பட்ட இலவம் பஞ்சுபோல், இவ்வதிவேக மாறுதல்களின் இடைக் கிடந் துழலும் நம் உயிர்கள் அவற்றை முறை முறையே மறந்துவிடுதல்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/223&oldid=1583279" இலிருந்து மீள்விக்கப்பட்டது