என்று
- முன்பனிக்கால உபந்நியாசம்
197
க்
நிட்களோபாசனை சகளோசபானை யென் யென்னும் அருவவழிபாடும் உருவ வழிபாடும் உடன் வகுத்து கூறுதலானும் தெளிவாய்ப் பெறப்படும். இதனால் இறைவற்கு உருவவழிபாடு சொல்லிய பாகஞ் சிறிதும் உபநிடதங்களுட் காணப்படா தென்னும் பிரம சமாஜத்தார் கூறுவதூஉம் போலியாதல் காண்க.
ய
இனி வைணவர் கூறுமாறு இறைவனுக்கு உருவ மாத்திர முண்டென்று கூறாமோ வெனின்; கூறாம்; என்னை? அங்ஙனம் வரை யறுத்துக் கூறின் அஃது அருவ மாதற் குரிய சத்தி உடைய தன்றெனவும், உருவுடைப் பொருள்களான பிருதிவி அப்புத் தேயு வாயுக்களில் ஒன்றாய் ஒழியுமெனவும் பெறப்படு
மாகலினென்க.
என்றிங்ஙனங் கூறியவாற்றால் இந்துசமயம் எனப் படுவது இமயமுதற் குமரியீறாக யாண்டும் பொது வாய்ப் பரவி வழங்கும் பொதுக் கொள்கைகளாதலும், இக் கொள்கைகளுட் சிலசில வெடுத்து வற்புறுத்து அவை தம்மை மாத்திரம் அனுசரித்து வரும் காருவாகம் பொளத்தம் முதலிய சமயங்கள் இந்துசமயப் பிரிவாய் ஏகதேசமாய் அதன் கண் அடங்குதலும், இந்துசமயப் பொதுக் கொள்கைகள் வியாபக இலக்கண முடையவாய் இவற்றையெல்லாம் தமதகத்தே யடக்கி வியாபித்தலும், இக் கொள்கைகள் எல்லாவாற்றா னும் பொருத்த முடையவாய் விளங்கலும் அறிவுறுத்தப் பட்டன.
னி இவ் விந்துசமயம் எனப்படுவ தியாதென்று உண்மை யான் விசாரித்தவழி அதுவே சைவ சித்தாந்தம் என்னும் வேறு பெயரான் வழங்கப் படுகின்ற தென்பதினிது புலப்படா நின்றது.
ஜடமாகிய பிரபஞ்சமும் சித்தாகிய அறிவும் வேறு வேறா மென்பதும் அறிவுடைப் பொருள் ஆன்மாவா மென்பதும் சித்தாந்தத்தின் கொள்கையாம்; இதற்குப் பிரமாணம்.
“அசத்தறியாய் கேணீ யறிவறிந்த வெல்லாம்
அசத்தாகு மெய்கண்டானாயின்--அசத்தலாய் நீரிலெழுத்தும் நிகழ் கனவும் பேய்த்தேரும் ஓரிலவையின்றாமா றொப்பு”