* முன்பனிக்கால உபந்நியாசம்
203
ஆண்டானெங்கோ ானெங்கோ னருள்வழியிருப்பத், தூண்டுசோதி தோற்றிய தொன்மையும்” என்றும் சுவாமிகள் பிறாண்டும் ஓதிய ஏனை உபப்பிருங்கணவாக்கியங்களால், இறைவன் மதுரையிற் கொண்டுவந்த பரிசுகள் எல்லாம் நரிகளா லாக்கினவேயாமாவது நன்கு தெளியப்படுமென்க; அல்லதூஉம், அங்ஙனம் நரிகளையெல்லாம் பரிகளாக்கிக் கொணர்ந்தவர் பெருந்துறையிற் குருந்தமரநீழலிற் குருவடிவாய் எழுந்தருளித் தமக்கு அனுக்கிரகித்த இறைவனே என்பது பொள்ளெனப் புலப்பட மாணிக்கவாசகர் ‘பெருந் துறையான்' எனவுங் கிளந்தெடுத்துக் கூறினாராகலின், நரிபரியான திருவிளை யாடல் மாணிக்கவாசக சுவாமிகள் பொருட்டே நிகழ்த்தப் பட்ட தென்னும் உண்மை மலை யரண்போல் நிலைபெற நிற்றல் காண்க. இத்துணை நுட்பமும் ஒருங்குணர்ந்து அத் திருவிளையாடல் மாணிக்க வாசகர் பாலதாக வைத்துக்கூறிய ஆ ன்றோர் தொல் வழக்குரைப் பொருளோடு, பெரிதும் மாறுகோளுற்றுக் கூறியதன்மேலும் அமையாது, அவர் தம்மைத் "தாம் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று பிடிவாதமாய்ச் சாதிப்பார்" என்று இகழ்ந்து கூறிய ராவ் அவர்கள் அறியாமையை என்னென்பேம்!
இனி "நரியைக் குதிரைசெய்வானும்” என்னும் அப்பர் திருவாக்கில் வேறுகூட்டிச் சொல்லப்பட்ட “நரகரைத் தேவு செய்வானும்” “விரதங்கொண்டாட வல்லானும்” “விச்சின்றி நாறுசெய்வானும்” என்றற் றொடக்கத்துப் பிறலீலைகள் எவர்பொருட்டுச் செய்யப்பட்டன? என்று ராவ் அவர்கள் வினாவுகின்றார். பிறவகையிற் பிறர்பொருட்டுச் செய்யப் பட்ட ஏனை லீலைகளைக் குறித்து இங்ஙனம் வினா நிகழ்த்தல் எடுத்த பொருளுக்குச் சிறிதும் இயைபுடைத் தாகாமை அவர் உணராததென்னை? மாணிக்கவாசகர் பொருட்டு நிகழ்ந்த நரிபரித்திருவிளையாடலை அப்பர் கூறியதனானே, அதனோடு ல உடன் தொகுத்துக் கூறப்பட்ட ஏனையவும் மாணிக்கவாசகர் பாலனவாகக் கூறவேண்டு மென்பது ராவ் அவர்கள் கருத்துப் போலும்! இத்தருக்கமுறை அழகிது! அழகிது!! அன்பர்கள் பொருட்டு இறைவன் நிகழ்த்திய திருவிளை யாடல் மாட்சியினைத் தொகுக்கப் புகுந்த திருநாவுக்கரசு சுவாமிகள், மாணிக்கவாசகர் பொருட்டும் பிறர்பொருட்டும் நிகழ்ந்தன