பக்கம்:மறைமலையம் 15.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முன்பனிக்கால உபந்நியாசம்

205

அல்லதூஉம், கும்பகோணத்துக்கு அருகாமையிலுள்ள திருவலஞ்சுழிக் கல்வெட்டொன்றில் மாணிக்கவாசகர் பெயர் காணப்படுகின்ற தென்றுரைத்த ராவ் அவர்கள், அக் கல் வெட்டின் காலவளவையும் அதன் வரலாறும் கூறாது விட்டது என்னையோ? திருவலஞ்சுழிக் கல்வெட்டு மிகப் பழையதாதல் பற்றி அதனை விவரித்துரைப்பிற் றமது கொள்கை புரைபடுமெனக் கருதி விட்டார்போலுமென எமக்கு ஐயம் நிகழாநிற்கின்றது. அது நிற்க.

L

அல்லதூஉம், சோழன் உருவப் பஃறேர் நெடுஞ்சேட் சென்னி, சேரலாதன், ஆலங்கானத்திற் போர் போர்வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் என்றற் றொடக்கத்துப் பழைய தமிழ் மன்னர் பெயரும், நக்கீரர், கபிலர், பரணர், மாங்குடிமருதனார் என்றற் றொடக்கத்துத் தமிழ் நல்லிசைப் புலவர் பெயரும் பொறித்த கல்வெட்டுகள் காணப்படாமைபற்றி அவரெல்லாம் பிற்காலத்திருந்தன ரென ராவ் அவர்கள் கூறப்பெறுவரோ? பண்டைக்காலத்துத் தண்டமிழ் வளஞ் சிறக்க இலக்கண இலக்கிய நூல்கள் பரக்கக்கற்றும் பலப்பல புதிதுபுதிதா இயற்றியும் வந்தமை யானே, அந்நூல்களால் அம்மன்னர் புலவர் முதலாயினார் பெயர் பதிக்கப்பட்டு இன்று காறும் வழங்கிவரலாயின. இலக்கண இலக்கிய நூல்வழக்கின்றி நாகரிகக் குறைவுள்ள காலத்தின் மாத்திரமே மன்னர்கள், தம்பெயரும் தம்கொடைத் திறமும் மறையாதிருத்தற் பொருட்டுக் கல்வெட்டுகள் தோற்றுவிப்பர். யாங்கூறுவதே உண்மைப் பொருளென்றற்குத் தமிழ்வளம் மிக்க பண்டை நாட்டமிழ் மன்னர் கல்வெட்டுக்கள் இதுகாறும் வெளிவராமையே மயே உறுஞ் உறுஞ் சான்றாம். மற்று இவ்வாறன்றி, இராசராச சோழன் முதலிய பிற்காலமன்னர் காலத்தே தமிழ்க்கல்வி வளஞ் சுருங்கிப்போக, மிலேச்சவரசர் பலர் அலைமேலலை புகுந்தாற் போல இடையிடையே படையெடுத்து வந்து இந்திய மக்களை நலிந்து குழப்ப முண்டாக்கி வந்த காரணத்தானே, பிற்காலத்துத் தமிழ்வேந்தர் தங்கொடைத்திறம் முதலியன தமக்குப் பின்னும் அழியாது புலப்படுதல் வேண்டிக் கற்களிற் பொறித்து நிலைபெறுவித்தார். பண்டைநாட்டமிழ் மன்னர் காலத்து வேற்றரசர் தமிழ்நாடு புகுதாமையானும், தங்கொடைத் திறத்தை வியந்தியற்றி தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/238&oldid=1583296" இலிருந்து மீள்விக்கப்பட்டது