206
மறைமலையம் 15
நூல்கள் அழியாவென் றவர் கருதினமையானும் அவர் பிற்காலத்தார் போலக் கல்வெட்டுகள் தோற்றுவித்திலரென்க. இங்ஙன மாகலின் மாணிக்கவாசகர் பெயர் கல்வெட்டுக்களிற் காணப்படாமை கொண்டே அவர் ஏனைமூவர்க்கும் முற் பட்ட காலத் திருந்தாரென்பது பெறப்படும். அவர் பிற்காலத்
திருந்தனராயின்
கல்வெட்டுக்கள் மிகுதியுமுண்டான அப்போது அவர்பெயர் பெரிதும் அவற்றிற் காணப்பட்டுக் கிடக்கு மென்க. அற்றேலஃதாக, இராச ராச சோழன் தனக்கு முன்னிருந்த சிறுத்தொண்டர் சீரான தேவரைக் குறிப்பித்த வாறுபோல, அங்ஙனமே தனக்கு முற்பட்ட மாணிக்க வாசகரைக் குறிப்பிடாத தென்னை யெனின்;- அஃதவ்வரசன் கருத்தறி வதற்குக் கருவி வாய்ப்பி னன்றி முடிவுகட்டல் ஏலாததொன்றாம். ஒவ்வொருவர்க்கு ஒவ்வொருகாரணம் பற்றி ஒவ்வொருவர் மாட்டு அன்பு நிகழும். தம் ஒரே புதல்வனை அறுத்துக் கறிசெய்து அடியார்க்கு அமுதூட்டிய அருமைத் திறத்தை மிகவியந்து அவ்வரசன் உலகத்தார்க்கு அவரன் பின்றிறத்தை நன்மாதிரி யாய் நிறுத்தல் வேண்டி அங்ஙனம் அவரைக் குறித்திருக்க லாம். இதுவேயன்றிப் பிறகாரணமும் இருக்கலாம். அல்லதூ உம், தனக்குச் சிறுகாலம் முற்பட்டிருந்த சிறுத்தொண்டரை நினைவு கூர்தற்குக் காரணம் வாய்த்தாற் போலத், தனக்குப் பெருங் காலம் முற்பட்டிருந்த மாணிக்க வாசகரை நினை வற்றுப் பிரதிட்டை செய்தற்குக் காரணம் அம்மன்னற்கு வாயாது மிருக்கலாம். ஆகலின், அதனை ஒரு காரணமாய்க் கொண்டு, மாணிக்க வாசகர் காலம் பிறபட்டதென நிறுவப் புகுதல் பெரிதும் பிழைபடுவ தொன்றாம் என்க. மேலும், 11-வது நூற்றாண்டிற்கு முன்னர் மாணிக்கவாசகர் உருவம் எந்தக் கோவிலினும் பிரதிட்டிக்கப் படவில்லை என்கின்றார். இங்ஙனம் கூறும் இவர் சுவாமிகள் உருவம் அவ்வாறு எங்கும் பிரதிட்டிக்கப்படவில்லை என்பதனைக் காரணங்காட்டி நிச்சயித்தனரா? சிறிதும் இல்லை. பிரபல காரணங்கள் எடுத்துக் காட்டாது ‘எனக்குத் தோற்றிய வரையில்' என்று நெகிழ்ந்து உரை கூறிப்போதல் சரித்திர முறைக்குச் சிறிதும் இணங்காத தொன்றாமென்க. இவர் தமக்குத் தோன்றிய இவ்வற்புத தோற்றத்தைத் தம்மளவே வைத்துப் பார்த்துப் பார்த்து மகிழ்க.
L