பக்கம்:மறைமலையம் 15.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முன்பனிக்கால உபந்நியாசம்

209

யாமென்க. அற்றேல், பரஞ்சோதி முனிவர் திருவிளையாட லினும், வேப்பத்தூரார் திருவிளை யாடலினும் அங்கே கோயிலுள்ளதாகச் சொல்லப் பட்டிருத்தல் என்னையெனின்; பின்னையோரான அவ்விரு வரும் சரித்திர மாறுபாடாகத் தாமே சிருட்டித்துக்கொண்டு ஓதுவன் பல உளவாகலின், அவர் கூறுவன ஈண்டைக்குப் பிரமாணமாகாவென்க. திருவாதவூரர் புராணம் ஒன்றுமே சுவாமிகள் சரித்திரத்தைப் பிழைபடாமல் உள்ளவாறே யுரைப்பதாம்; இம்மெய்ப்புராண வுரையோடு

திறம்பிக் கூறும். அப்புராணவுரைகட்கு ஆதாரம்

திருவாசகத்தும் பிறாண்டும் பெறப்படாமையின் அவை காள்ளற்பாலன வல்லவென்று மறுக்க.

இனி, மாணிக்கவாசகர் வருமிடம் நோக்கி அவரை ஆட்கொண்டருளல் வேண்டிக் குருநாதன் அப்பூங்காவிலே எழுந்தருளினான். மாணிக்கவாசகர் தாங் குதிரைகொள்ளப் போன அப்பெருந்துறையிலே அக்குருநாதனைக் கண்டு மெய்ஞ்ஞானப் பேறுடையராய் விளங்கினார். இங்ஙன மல்லது மாணிக்கவாசகர் பெருந்துறையிலே சிவாயல மிருப்பதாக உணர்ந்து அங்குச் சென்றாரல்லர். ஆகலின், இவர் அவ்விடஞ் சன்றதுகொண்டே அங்குச் சிவாலய மிருந்ததென நாட்டுவாருரையும் பொருந்தாதென்றுணர்க.

L

இனி, மாணிக்கவாசகர் தாம் மெய்ஞ்ஞானப் பேறு பெற்று இறைவனுக்கு ஆட்பட்ட பெருந்துறையில் உடனே கோயில் கட்டுவித்தாரென்றேனும், உபதேசம் பெற்றுப் பாண்டியனிடம் போய்ப் பின்னும் பெருந்துறை நண்ணி அவ்விடத்தைக் கடைசியாகவிட்டு மீண்ட பின்னர்த் திரும்பவும் அவ்விடத்திற்குச் சென்றாரென்றேனும் திருவாசகமாவது திருவாதவூரர் புராணமாவது கூறுகின்றில. மாணிக்கவாசகர் பின்தாம் பெருந்துறையை நினைவுகூர்ந்த போதெல்லாம் அங்கே குருந்தமரநீழலிலே எழுந்தருளித் தம்மை யாட்கொண்ட குருநாதன் கோலத்தையே நினைந்து ருகினதாகத் திருவாசகத் தினாற் பெறப்படுகிறதே யல்லாமல் அங்கே சிவாலயமிருந்த தாக நினைவுற்றுருகினரென்பது சிறிதும் புலப்படவில்லை.

அற்றேலஃதாக, மாணிக்கவாசகர் தாங்குதிரை வாங்குதற் கென்று கொண்டு கொண்டு சென்ற பொருட்டிரளை யெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/242&oldid=1583301" இலிருந்து மீள்விக்கப்பட்டது