உடன்
- முன்பனிக்கால உபந்நியாசம்
211
ன்சென்று விழாமல் உத்தர கோசமங்கை யென்னும் நம் ஊரிற் சென்று, சித்தியங்கு எவையும் எய்தி அதன்பின் நஞ் சிவலிங்க வடிவு வைத்த சிவதலங்கடோறுஞ் சென்று வருகுவையாயின் அங்கங்கும் இத் தழற்பிழம்பு வடிவே த் காண்பாய், இறுதியாகச் சிதம்பரம் போந்து அங்கே புத்தரை வாதில் வென்றபின் சிவ பெரும்பதம் பெறுகுவை என்று அக்குருமூர்த்தி அருளிச் செய்ததாகத் திருவாதவூரர் புராணங் கூறுகின்றது. இங்கே உத்தரகோசமங்கையைச் சிவலிங்கம் வைத்த தலமாகக் கூறாமல், மற்றைத் தலங்களையே அது வைத்ததாகக் கூறினமையே கவனிக்கற் பாலதாம். மாணிக்க வாசகர் தம் சிவநிட்டை கைகூடுதற் காகவே அந்நிட்டை மெய்ப்பொருள் தேற்றிய குருநாதன், திருப்பெருந்துறைப் பூங்காவோ டொப்பப் பொழில்கள் நிறைந்து நிட்டை புரிதற்குப் பெரிதும் அனுகூலமுடைத்தாய் விளங்கும் திருவுத்தர கோச மங்கை யூர்க்கு ஏகுகவென்று ஏவினா ரென்பது மேலதனால் தெளியற்பாலதாம். அதனால், திருவுத்தரகோச மங்கையில் அந்நாளில் சிவாலய மிருந்ததின் றென்பதூஉம் பெறப்படுவ தேயாகும். மெய்ப்பொருள் வழாதுகூறும் இத்திருவாதவூரர் புராணவுரைக்கு ஏற்பவே மாணிக்கவாசகப் பெருமானும் தன்னருமைத் திருவாக்கால்.
66
அளிதேர்விளரி, ஒலிநின்றபூம் பொழில் உத்தரகோசமங்கை' “அணிபொழில் உத்தரகோசமங்கை
66
ய
ச
என நீத்தல் விண்ணப்பத்தினும், 'தெங்குலவு சோலைத் திருவுத்தரகோச மங்கை’ எனத் திருப்பொன்னூசலினும் கிளந்தெடுத்தருளிய வாறுங் காண்க. 'திருவுத்தர கோச மங்கைக்கரசே’ என விளித்துக் கூறுவதெல்லாம் ஆங்குத் தழலுருவாய்த் தோன்றிய சிவ பெருமானை யல்லது வேறில்லை யென்க. ஆகவே, உத்தரகோசமங்கை ஊரிலும் மாணிக்கவாசகர் காலத்திற் சிவாலய மிருந்ததில்லை யென்பது இனிது துணியப் படுவதாம். ராவ் அவர்களும் இவ்விரண்டு கோவில்களும் பழைய காலத்தன அல்ல என்கின்றார். அது நிற்க.
இனி மாணிக்கவாசகர் காலத்தும் அவர்க்குச் சில நூற்றாண்டு பிற்றோன்றிய அப்பமூர்த்திகள் முதலான ஏனைச்