212
மறைமலையம் – 15
சமயாசிரியன்மார் மூவர்காலத்தும் திருப்பெருந் துறையும் திருவுத்தரகோச மங்கையும் சிவாலயங்கள் உடை யவா யில்லாமையால், சிவாலயமுள்ள தலங்களுக்கே சென்று திருப்பதிகங் கட்டளையிடும் கடப்பாடு உ டை டயரான சமயாசிரியர் மூவரும் அவ்வூர்களைத்தம் திருவாக்கிற் குறியாது விட்டனர். ஆகையால் அவர்கள் குறியாது விட்ட காரணம் இன்னதென்று பகுத்துண ராமலும், மாணிக்க வாசகர் காலத்து அக்கோவில்கள் கட்டப்படவில்லை என்பதுணராமலும், தேவாரத்தில் அத்தலப்பெயர்கள் வராதது ஒன்றேபற்றி மாணிக்கவாசகர் அம்மூவர்க்கும் பிற்பட்டவ ரென்று கூறிய ராவ் அவர்கள் உரைப்பொருள் பொருத்தமின்றா மெனவிடுக்க.
அற்றேல், திருப்பெருந்துறை, திருவுத்தரகோசமங்கை என்னும் அத்தலங்கள் உற்பத்தியாய வாறுதான் என்னை யெனிற் கூறுதும். மாணிக்கவாசகர்க்கும் ஏனைச் சமயாசிரி யர்க்கும் பிற்காலத்தே திருவாசகம் மிகுதியும் ஓதப்படுவ தாயிற்று. அங்ஙனம் ஓதப்படுகின்றுழி அவ்விரண்டிடங் களும் ங் பெருமானால் சிறந்தெடுத்துச் சொல்லப்படுத லாலும், ஒன்றிற் பிறவியறுக்கும் மெய்பொருளுப தேசமும் மற்றொன்றில் நிட்டைகூடிப் பெற்ற மெய்யனுபவ சித்தியும் அப்பெரு மானுக்கு விளைந்தமையாலும், இவை யெல்லாம் பிறர் நினைவு கூர்ந்து உய்தற்பொருட்டுப் பிற்காலத்தரசர்கள் அவ்
விரண்டிடத்தும் சிவாலயங்கள் விரிவு படக் கட்டி வைப்பாராயினர். பிற்காலத்தினரான விஜய நகரத்தரசர் சிலாசாசனங்களும் பாண்டிய அரசர் சாசனங்களும் திருப்பெருந்துறையிலும் திருவுத்தர கோசமங்கையிலு காணப்படுகின்றன வென்று ராவ் அவர்கள் எடுத்துக் காட்டிய பிரமாணங்கள் அவர் கொள்கையையே வேரற அறுத்து எமது கொள்கையை வச்சிரத் தம்பம்போல் நாட்டுவவாயின.
இன்னும் பிற்காலத்தின்கண் இருந்த விஜயநகரத்து நாயக்க மன்னர் கட்டிய அமைப்புக்களே பெரும்பாலுங் காணப்படுதலால் திருப்பெருந்துறைச் சிவாலயத்தின் கர்ப்பகிருகம் ஒன்று தவிர ஏனைய வெல்லாம் அவர்களே அமைத்தன வென்று ராவ் அவர்கள் கூறுவதனால் எமது காள்கை பெரிதும் வலிபெறல் காண்க. என்னை? நால்வர்