பக்கம்:மறைமலையம் 15.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

215

இங்கு அடியார் என்றது ஞானசம்பந்தர் முதலாயினாரையே யாமென்று கூறி, அதனால் சுவாமிகள் ஏனை மூவர்க்கும் பிற்காலத்தினரெனக் கூறிய ராவ் அவர்கள் திரிபுணர்ச்சி பெரிதும் இரங்கற் பாலதொன்றாம் என்க.

இனி, மாணிக்க வாசக சுவாமிகள் பலவேறு திருவிளை யாடல்களைக் குறித்துப் பாடா நிற்ப, ஏனைமூவரும் அவற்றிற் சிலவே கூறுதலாலும், அங்ஙனம் அவை பலவாய்ப் பெருகிய காலம் பிற்காலத்தின் கண்ணதாக வேண்டு தலாலும் அத்திருவிளையாடல்கள் பலவற்றையும் எழுதின வேப்பத் தூரார் திருவிளையாடற் புராணத்திற்கும் பரஞ் சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்திற்கும் சிறிது முன்ன ராயினும் பின்னராயினும் மாணிக்கவாசக சுவாமிகள் காலத்தை வரையறுக்க வேண்டுமென ராவ் அவர்கள் கூறுகின்றார்கள்.

கூ

இவர்கள் கூறியது பெரிதும் பிழைபடுவதொன்றாம். மாணிக்கவாசக சுவாமிகள் தமது அருமைத் திருவாக்கில் எடுத்துக் கூறின வெல்லாம் மிகப் பழமையான திருவிளை யாடல்களே யாம். ஞானசம்பந்த சுவாமிகளுக்குப் பின்னே மாணிக்கவாசக சுவாமிகள் இருந்தனராயின், மூன்று வயதிலே உமைதிருமுலைப் பாலுண்டு பேரற்புத ஞான மூர்த்தியாய்ச் சைவம் எங்கணும் விளக்கிச் சமணரை வாதில் வென்ற ஞானசம்பந்தப் பெருமானைப் பற்றிய திருவிளை யாடலைக் கூறாது விடுவரோ? இஃதொன்றானே மாணிக்க வாசகர் ஞானசம்பந்தர்க்கு முன்னிருந்தா ரென்பது சிறு மகார்க்கும் இனிது விளங்கிக் கிடப்பதாக, இது தானு முணராது ராவ் அவர்கள் காலவரையறை செய்யப் புகுந்தது நகையாடற் பாலதொன்றாம். மேலும், அப்பர் திருஞான சம்பந்தர் திருவாக்குகளில் திருவிளையாடல்கள் பலவந்திருக் கின்றனவே யல்லாமல் ராவ் அவர்கள் கூறியபடி சிலவே வந்தில. இவ்வுண்மை தெரிய வேண்டுபவர் ஸ்ரீமத் வே சாமிநாதையர வர்கள் தமிழுல கத்தைக் கடமைப் படுத்தி வெளியிட்ட வேப்பத்தூரார் திருவிளையாடல் முகப்பிலே மாணிக்க வாசகர் திருவாக்கினும் மூவர் திருவாக்கினும் போந்த திருவிளையாடல் களையெல்லாம் மிக்க பிரயாசை யோடு தொகுத் தெடுத்துப் பிரசுரித் திருக்கின்றார்களாதலின் ஆண்டுக் கண்டு கொள்க. அங்ஙனம் காணவல்லவர் ராவ் அவர்கள் கூறியது முழுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/248&oldid=1583307" இலிருந்து மீள்விக்கப்பட்டது