பக்கம்:மறைமலையம் 15.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

❖ - 15❖ மறைமலையம் – 15

பொய்யுரையேயாமென்று தேர்வர், மாணிக்க வாசக சுவாமிகள் தங்காலத்தும் தங்காலத்திற்கு முன்னும் நடந்த திருவிளையாடல்கள் பலவற்றை விதந் தெடுத்துக் கூறுதல் போலவே, ஏனைச் சமயகுரவன் மாரும் தங்காலத்துந் தமக்கு முன்னும் நடந்த பலவற்றை எடுத்துக் கூறுகின்றனர். அது கிடக்க.

னிக் கி.பி. 904 ஆம் வருஷம் அரசாண்ட பராந்தகச் சோழன் தில்லைச் சிற்றம்பல முகட்டைப் பொற்றகடு வேய்ந்து சிறப்பித்த பின்னரே அவ் வம்பலத்திற்குப் பொன்னம்பலம் என்று பெயர் வந்ததென்றும், மாணிக்க வாசக சுவாமிகள் கீர்த்தித் திருவக வலில் “அம்பொற் பொலிதரு புலியூர்ப் பொது வினில் நடம் நவில்”எனவும், திருக்கோவை யாரில் “சேணிற் பொலிசெம் பொன் மாளிகைத் தில்லைச் சிற்றம் பலத்து எனவும் கூறுதலோடு கோயின் மூத்த திருப்பதிகம் முழுவதூஉம் இப்பெயரேவரப் பாடுதலாலும் அச் சுவாமிகள் பராந்தகச் சோழன் காலத்திற்கும் பின்னரே தான் இருந்திருக்க வேண்டுமென்று கூறிய ராவ் அவர்கள் அப் பராந்தகனுக்கு முன்னிருந்த அப்பர் சுவாமிகளும் செம்பொனம்பலம் எனக்கூறி யிருத்தலை உணர்ந்துகுன்று முட்டிய குரீஇப் போலப் பெரிதும் இடர்ப்பட்டு அதனை விலக்கி விடுவார் போல அப்பர் திருவாக்கில் வந்த ‘பொன்னம்பலத்’ திற்குப் 'பொன்னனைய அம்பலம்' என்பது பொருள் போலத் தோன்று கின்றதென நெகிழ்ந் துரையாடிப்போனார்.

ராவ் அவர்களுக்கு இங்ஙனம் நடுநிலை வழீஇ ஓரம் பேசி இழுக்குறும் திரிவுபாடு வந்ததென்னை யெனின்:-- தமிழ்த்தேயத்துப் பெரியாருள் யாரும் பழைய காலத் திருந்திலர் என்று நாட்டவும், தம்மை யொத்த ஆரியப் பெரியாரே பழைய காலந் தொட்டு நாகரிக முடைய ராயிருந்தனரென்று காட்டவுமே புக்காராகலின் அங்ஙனந் தன்னைப் பற்றுதல் என்னுங் குற்றத்திற்பட்டுப் பொருள் உண்மை தேராது ராவ் வழுக்கினார் என்க. அது கிடக்க.

அப்பர் சுவாமிகள் திருவாக்குக்குப் பொன் போன்ற அம்பலம் என்று பொருள் பண்ண வந்த ராவ் அவ்வாறே மாணிக்கவாசக சுவாமிகள் திருவாக்குக்கும் பொன்னனைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/249&oldid=1583309" இலிருந்து மீள்விக்கப்பட்டது