* முன்பனிக்கால உபந்நியாசம்
99.66
217
சம்
அம்பலம் என்று பொருள் செய்யாது விட்டதென்னை? ஒரே கையான ஒரு ஒரு சொற்றொடர்க்கு ஒருகால் ஒருவாறும் பிறிதொருகாற் பிறிதொருவாறும் பொருள் பண்ணுதற்கு இவர் கொண்ட காரணம் யாது? காரண மின்றித் தமக்கியைந்த வாறெல்லாம் பொருள் செய்தால் இவர்போற் றிரிபடையாத நல்லறிவுடையார் இவருரைக்கு வருரைக்கு இணங்குவரா? மேலும் அப்பர்சுவாமிகள் பொன் போன்ற அம்பலம் என்று பொருள் செய்தற்கு இடந்தராமல் உரையாணி மாற்றுள்ள செம்பொன்னாற் செய்த அம்பலம்' என்றும் 'கதிர்விரியும் செம்பொன் அம்பலம்' என்றும், 'பரிசுத்த மான செம் பொற்றகடு எழுதி மேல்மூடிய சிற்றம்பலம்' என்றும், பொன்னாற் செய்யப்பட்ட அம்பலம்' என்றும் இனிது பொருள் விளங்குமாறு "ஆணியைச்செம் பொனம்பலம்” “சுடர் செம்பொனம்பலம்’ தூய செம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம்” என்று திருக்குறுந்தொகையிலும் 'பொன்னாகிய தில்லைச்சிற்றம்பலவன்' என்று திருவிருத்தத் தினும் அருளிச் செய்திருப்ப இவற்றையறிந்து பொருள் கொள்ளுமா றறியாத ராவ் அவர்கள் தமிழ் நூலாராய்ச்சியிற் புகுந்தது என்னாம்! அற்றேல், பராந்தகச் சோழன் பொன்வேய்ந்த பிறகு செம்பொன்னம்பலம் என்று பெயர் வந்ததென்னுங் கூற்று எவ்வாறாமெனின்:- அஃது அறிவில் கூற்றாமென்றே மறுக்க. பராந்தகன்பிற ஆலயங்களுக்குச் செம்பொன் முகடுவேயாது இத்தில்லைச் சிற்றம்பலத்திற்கு மாத்திரம் அங்ஙனம் பொன்முகடுவேய்ந்த காரணம் என்னை யென்று நுணுகி யாராய வல்லார்க்கு, அவ்வம்பல முகடு பண்டைக்காலந் தொட்டு அங்ஙனம் பொன் வேயப்பட்டு வந்த காரணத்தானே பராந்தகவேந்தனும் தன்காலத்து அதனைப்புதுப்பித்து அங்ஙனம் பசும் பொற்ற கடுவேய்வா னாயிற் றென்பது தெற்றென விளங்கா நிற்கும். பராந்தகனுக்கு முன்னரிருந்த பெருந்தமிழ் வேந்தர் பொன் வேயாது விட்டிருந்தனர் என்பதனை ராவ் எந்தச் சிலா சாதனத்திற் கண்ட ரோ அறியேம். ஆரிய அபிமானத் தாற் கட்டி இறுகிய தம் மனோபாவகச் சிலையிற் கண்டார் போலும்! அப்பர் சுவாமிகள் திருவாக்கால் பராந்தகனுக்கு முன்னும் தில்லைச் சிற்றம்பல முகடு பொன்வேயப் பட்டிருந்ததென்னும் உண்மை உள்ளங்கை