பக்கம்:மறைமலையம் 15.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

❖ - 15❖ மறைமலையம் – 15

நெல்லிக்கனி போலினிது பெறப்படுதலின், மாணிக்கவாசக சுவாமிகள் பொன்னம்பலம் என்று தந்திருவாக்கிற் கூறியது கொண்டே அவர் பராந்தகனுக்குப் பின்னிருந்தாரெனும் ராவ் அவர்கள் உரை பொருளொடு புணராப் போலியுரையாமென்க.

இனித் தக்ஷிணாமூர்த்தியுபாசனை மாணிக்கவாசக சுவாமிகளுக்குப் பின்னர்த்தான் தோன்றியதென ராவ் அவர்கள் ஊகம் செய்கின்றனர். அவ்வூகம் காரணமின்றி அவரது வெறும் பாவனைக்கட் டோன்றுதலின் அதனை அறிவுடையோர் கொள்ளா ரென்பது. தக்ஷிணா மூர்த்தம் ஜனகர் முதலான முனிவர் நால்வர்க்கு அத்துவித உண்மை உணர்த்துதற் பொருட்டுக் கொண்ட பழமை அருட்கோல மென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததாகலின், அதனைப் பிறிதாகக் கூறுதல் பொருந்தாதென மறுக்க. இன்னும் முதலாம் குலோத்துங்க சோழன் தக்ஷிணாமூர்த்திக்கு மானியம் விட்டான் என்று கூறிய திருக்கண்டேசுர ஆலய சாதனத்தைக் கொண்டு அப்போது தான் அம்மூர்த்தி உபாசனை தொடங்கிய தென்றல் பெரியதோர் குழறு படையாம். அது மானியம் விட்டமை கூறியதேயன்றி அப்போதுதான் அவ்வுபாசனை தோன்றிய தெனக் கூறிற்றி லது. அவ்வாறாக ஒருநியதியுமின்றித் தம் மனம்போன வாறு அதற்குப் பொருள் செய்தலில் நம் ராவ் அவர்களே யன்றி வேறு எவர் வல்லார்!

இனிப் புத்தரோடு சுவாமிகள் தில்லைச் சிற்றம் பலத்தில் வாது புரிவதைப் பார்க்கப் பாண்டியனும் ஈழ மன்னன் ஒருவனும் வந்து அப்போதங்குவந்த சோழனை வணங்கித் திறைதந்தன ரென்பது திருவாதவூரர் புராணத்திற் குறிக்கப் பட்டிருக்கிற

தன்றும், அங்ஙனம் பாண்டியர் சோழ மன்னர்க்குக் கீழ்ப்பட்ட காலம் 10-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூறாண்டிறுதி வரையுமாம் என்றும், அதனால் மாணிக்க வாசகர் காலமும் அவ்விடைப்பட்ட காலத்திலே தான் வைக்கற் பாற்றென்றும் ராவ் அவர்கள் கூறுகிறார்கள்.

தில்லைச் சிற்றம் பலத்திற் சோழனுக்குப் பாண்டியன் திறை கொணர்ந்து செலுத்தினான் என்றது முழுப் பொய்யுரையாம். அத் திருவாதவூரர் புராணத்தையாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/251&oldid=1583311" இலிருந்து மீள்விக்கப்பட்டது