பக்கம்:மறைமலையம் 15.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முன்பனிக்கால உபந்நியாசம்

219

பன்முறையும் படித்துப் பார்த்தோம். அதன்கண் ஈழமன்னன் ருவன் திறை கொணர்ந்து வைத்துச் சோழவேந்தனை வணங்கினதாக மாத்திரம் சொல்லப்பட்டிருக்கின்றது; அது, ஈழவள நாடனு மெழுந்தடிபணிந்து திறையிட்ட

66

குறைநல்கி” என்னும் அப்புராணச் செய்யுளால் அறியப்படும். இவ் விலங்கை மன்னனைத் தவிர வேறு மன்னர்கள் அங்குவந்த தாகவேனும், பாண்டியன் வந்து சோழனைப் பணிந்ததாக வேனும் அப்புராணம் எங்கும் தேடித்தேடிப் பார்த்துங் கண்டிலேம். இவ்வாறாக இல்லாத தொன்றனை இருப்பதாக வைத்துப் பொய்யுரை கூறித் தருக்கம்நிகழ்த்த முன்வருதலில் ராவ் அவர்கள் முன்னதாக நிற்கின்றார். இஃதவர்க்கு நேர்மைதானோவென்பதை அறிவுடையோரே கூறக்கடவர்.

இனி வரகுணபாண்டிய னொருவனை மாணிக்க வாசகர் தம் திருவாக்கிற் குறிப்பிடக் காண்டலானும், அவ்வரகுணன் காலம் 9-ஆம் நூற்றாண்டென்று துணியப் படுதலானும், சுவாமிகள் காலம் அவ்வொன்பதாம் நூற் றாண்டிற்குப் பின்னரேதான் பெறப்படுதல் வேண்டும் என்கின்றார் ராவ். இன்னும் சேஷகிரிசாத்திரியார் காட்டிய பாண்டிய வமிசா வளிப்பட்டியில் ஒரே வரகுணன் காணப் படுதலால் அவனையே தான் சுவாமிகள் குறிப்பிடிருக்க வேண்டு மென்றும் ராவ் ஊகஞ் செய்கின்றார்.

இப்போது சரித்திர ஆராய்ச்சிக்குப் பயன்படும் சிலா சாதனங்களும் வமிசாவளிகளும் கி.பி. எட்டாம் நூற்றாண் டிற்குப் பிற்பட்ட பாண்டிய சோழ அரசர்களையே எடுத்துப் புகலுகின்றன. கி.பி.எட்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய பாண்டிய சோழசேர மன்னர்கள் பலப் பலர் உளராகப் பழைய செந்தமிழ் நூல்களால் அறியப்படவும், அவ்வரசர்களைப் பற்றிய சிலாசாதன செப்புப்பட்டயங் களுள் ஒன்றேனும் இப்போது அகப்படக்காண்கிலேம். சிவாலயங்கள் எண்ணிறந்தன கட்டுவித்த சோழன் கோச் செங்கண்ணானைப் பற்றிய சாதனமே அகப்பட்டிலதாயின் மற்றை அரசர்களைப் பற்றிக் கேட்பானேன்? இங்ஙனஞ் சிலாசாதனங்கள் எட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரே தோன்றியதற்கும் அதற்குமுன் தோன்றாமைக்குங் காரணம் முன்னரே கூறிப் போந்தாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/252&oldid=1583312" இலிருந்து மீள்விக்கப்பட்டது