220
❖ - 15❖ மறைமலையம் – 15
ய
ஆகவே, பிற்காலத்திய சிலாசாதன ஆராய்ச்சி பண்டை நாட்டமிழ் மன்னர் காலந் தேர்தற்குச் சிறிதும் பயன் படாததொன்றாமென விடுக்க. எனவே, பிற் காலத்து அரசர் பரம்பரையினைக் கூறும் சேஷகிரி சாத்திரியார் வமிசாவளிப் பட்டி ஈண்டைக்குச் சிறிதும் பயன்படா தென்றுணர்க. குலோத்துங்க சோழன், கரிகாற் சோழன் முதலான பெயர்கள் மன்னர்கள் பலர்க் கிருந்த வாறுபோல வரகுணபாண்டியன் எனும் பெயரும் மன்னர்கள் பலர்க்கிருந்திருக்க வேண்டும். இது காறுங் குறித்துவருங் காரணங்களானும், பின்னே காட்டப்படும் காரணத்தானும் பின்னிருந்த வரகுண பாண்டியனுக்கு மூன்று நூற்றாண்டு முற்பட்டிருந்த அப்பர்சுவாமிகளுக்கும் முற்பட்டவ ராக மாணிக்கவாசக சுவாமிகளிருத்தலால் அவர்களாற் குறிக்கப் பட்ட வரகுணபாண்டியன் வேறென்பதே துணிபொருளாம்.
வ
இனி மாணிக்க வாசக சுவாமிகள் புத்தகாலத்தினரா மென்று கூறுவாருரையை மறுத்துச் சைனமதம் புத்தர் காலத்திற்குப் பிந்தியதன் றென்றும், புத்தகாலம் 9-ம் நூற்றாண்டிற்குப் பின்னரும் நீண்டதென்பதற்கு கி.பி.984 முதல் 1012 வரையில் செங்கோலோச்சிய இராசராசன் காலத்தில் நாகபட்டினத்தின்கண் ஒரு பௌத்தப் பள்ளியிருந்தமையே சான்றாமென்றும் ராவ் அவர்கள் கூறுகின்றனர்.
னிருந்த
புத்தசமய மிருந்த காலத்தே சமணமதமும் உ தாயினும் அது மிகவும் செழிப்புற்று ஓங்கியது ஐந்தாம் நூற்றாண்டின் பின்னரேயாம். ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்னெல்லாம் புத்தமதமே மேலோங்கியிருந்தது. இதற்குச் சான்று மணிமேகலையும் சீவகசிந்தாமணியுமேயாம். மணிமேகலை பௌத்தம் மேலோங்கிய முதல் நூற்றாண்டி லும், சீவகசிந்தாமணி சமணம் மேலோங்கிய ஏழாம் நூற்றாண்டிலும் எழுதப்பட்ட நூல்களாம். ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னும் ஓரோவிடத்துப் பௌத்தமதம் இருந்ததென்றதனால் ஈண்டைக்கு ஆவதோர் இழுக்கில்லை. என்னை? அது பிற்காலத்துத் தன்பெருமை சுருங்கி ஒளி மழுங்கிக் கிடந்ததாகலின், இனி மாணிக்கவாசக சுவாமி களிருந்த காலத்துப் பௌத்தமதம் மிகவும் விரிந்து வலி