224
❖ 15❖ மறைமலையம் – 15
சுபா சுபங்களுக்கும், சௌக்கியா சௌக்கியங்களுக்கும் ஜெயாப ஜயங்களுக்கும் காரணமானதும், இனி இறந்து எடுக்கும் ஜன்மங்களிலும் தன்னுடைய அரசாட்சியை நிலை நிறுத்தா நின்றதுமானது இச்சக்தி.
ய
மனோசக்தியும், இச்சக்தியின் தத்துவங்களும் மனிதன் உண்டாக்கப்படும்போதே உண்டாக்கப்ட்டதான தொல் சிறப்பையுடையதாய் இருக்கின்றது. பற்பலயுகங்களில் மனிதன் தன்னுடைய அறிவுக்கு எட்டின மட்டும் இச் சக்தியின் தத்துவங்களை அனுபவத்தில் கண்டிருந்த போதிலும் இந்த யுகத்தில் தான் அத்தத்துவங்களின் உண்மைகளை ஏறக்குறைய முழுவதுமே தன் அனுபத்திற் கொண்டு வரப் பார்க்கின்றான். ஆனாலும், இவன் சிற்சில சமயங்களில் இச்சக்தியின் மகத்துவத்தின் ஏதோ ஒரு கூற்றைத் தெரிந்து கொண்டு அதுவே இச்சக்தியின் முழுதத்துவமென நினைத்துப் பற்பலவிதமாய் ஆங்கிலேய பாஷையில் பெர்ஸனல் மாக்னடிஸம் அல்லது ஆத்தும வசீகரணம் என்றும், இப்னாடிஸம் அல்லது யோகநித்திரை என்றும் கிளெர்வாயன்ஸ் அல்லது ஆத்துமக் காட்சி என்றும் இன்னும் வவ்வேறு விதங்களான பெயர்களால் பிரஸ்தாபித் திருக்கின்றனன். ஆனால் இந்திய மாதா வினிடத்தில் பிறந்த சல்வப் புத்திரர்களோ எத்துணையோ (சுமார் 2000) வருடங்கட்கு முன்னமேயே இச்சக்தியின் தத்துவங்களை அநேகமாய் முழுவதுமே அறிந்து அதன் காரணமாக மகோன்னதமான பதவிகளை அடைந்திருக் கின்றனர். மகான்களும், மேதாவிகளும், பண்டிதர்களும், சிற்பிகளும், லளிதவித்தைகளிற் சிறந்தோர்களும் ஏனை யோரும், இத் தத்துவங்களையறிந்து கைஆண்டு தத்தம் பதவிகளை அடைந்தனர்.
யுகாந்தர வேறுபாடுகளினால் அத்தியாவசியமாய் நேரிடுகின்ற மாறுதல்களில் உன்னத பதவியை அடைந் திருந்த இராஜாங்கங்களோ, ஜனங்களோ, மனிதன் புத்திக்கு எட்டாத காரணங்களால் க்ஷணதசை அடைவதும், அதிதுர்கூபலமான தசையிலிருந்த மனிதர்களும் இராஜாங் கங்களும் மகோன்னத பதவியை அடைவதும், ஞானத்திற் சிறந்து ஞான உலகத்திற்கு ரவிகளாய் விளங்கின. ஆன்றோர் களின் புத்திர பௌத்திரர்கள்