பக்கம்:மறைமலையம் 15.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

❖ - 15❖ மறைமலையம் – 15

ஒரு விஷயத்தைக் குறித்து ஓர் இருவர் சம்மதப்படுவதில்லை.

நாம் நம்முடைய சிவஞான போதத்தில் ஆத்துமா சிவனுள் ஐக்கியமடையக் கூடுமென்றும் ஆத்துமாவில் சிவன் செறிந்திருப்பனென்றும், பதியின்குணாதிசயங்களைப் பசு அடையக் கூடுமென்றும், இவ்வாறே ஞானிகள் அடைந்தா ரென்பதின் கருத்தை உண்மையாய் அறியவும் அறிந்த பின் தாமும் அப்படியே செய்யக்கூடுமென்ற தைரியமும் உண்மை இக்கலியுக ஜனங்களுக்கு இப்பொழுது தான் புலப்படுகின்றன.

யும்

மாயையைப்பற்றியும் மனோதத்துவங்களைப்பற்றியும் வ்விரண்டிற்குள்ள சம்பந்தத்தைப்பற்றியும் மனிதன் அறிந்து கொண்டே போக மனிதனின் சக்தி அபாரசக்தி யெனவும், விந்தையான தெனவும், மகா ஆகருஷமானது எனவும் உணர்ந்த உண்மை மனிதர் மனதில் கதிரவன் கிரணங்கள் போல் உதித்துக் காண்டு இருக்கிறது. இவ்விளக்கத்தின் பயனாய் மனிதன் தான் பஞ்சபூதத்தின் சக்தியையும் பிரபஞ்சத்திலிருக்கின்ற மற்றைய சக்திகளையும் ஆளத் தக்கவன் என்ற உண்மை மனிதர் மனதில் ஊன்றி நிற்கின்றது.

மன அமைப்பின் மகா பராக்கிரமமான மூன்று தத்துவங்கள் ஒன்றோடொன்று இணை பிரியாமல் கோவையாய் வருவதின் விளைவே மனோசக்தி. இதில் முதலாவதாவது எண்ணம் அல்லது நினைவு, இரண்டாவது ஆகாச ஆற்றல் (Etheric Energy), மூன்றாவது திடசித்தம். ஒவ்வொரு எண்ணமும் சூக்கும ஆகாயத்தில் ஒருவித அசைவு அல்லது அதிர்ச்சி உண்டாக்குகின்றது. இப்படி அதிர்ச்சி உண்டான போது மற்றைய மனிதர்களின் மூளையில் தாக்குகின்றது. இப்படி இருவருடை ய எண்ணங்களால் உண்டாக்கப்படும் அதிர்ச்சியானது ஒன்றுபட்டிருக்குமாகில் இவ்விருவருடைய எண்ணங்களும் ஒன்று சேர்ந்து ஒருவருக்குத் தோன்றியபடியே மற்றவருக்குந் தோன்றி ஒரேவித உணர்ச்சியை உண்டாக்குகின்றது. இப்படியே இவ்வுலகில் எத்துணையோ மனிதர் ஒரேமாதிரியான எண்ணங்கள் நினைப்பதால் ஒரேவித ஆகாச அதிர்ச்சி உண்டாகின்றது. இவர்களெல்லாரும் இப்படி ஒருவருக்கொருவர்

ணக்கமான எண்ணங்களையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/259&oldid=1583320" இலிருந்து மீள்விக்கப்பட்டது