228
❖ - 15❖ மறைமலையம் - 15
கம்பி யில்லாத தந்தியைக் (Wireless Telegraphy) கண்டு பிடித்த ‘மார்கோனி' என்பவர் பின்வருமாறு உரைக் கின்றனர்.
ஒரு வார்த்தையோ அல்லது அதற்கு ஈடானதோ, அசைவற்று நிற்கின்ற தெளிந்த தண்ணீரையுடைய தடாகத்தில் ஒரு கல்லையெறிந்த மாத்திரத்தில் ஒரு சுழியை உண்டாக்க அச்சுழியானது வரவரப் பெரிதாய் எப்படிச் செல்கின்றதோ, அதே மாதிரியாய்த் தந்தியியந்திரத்தில் உண்டான அதிர்ச்சி யானது மின்னல் வேகம் போன்று விரைவிற் சென்று தனக்கொத்த அசைவு அல்லது தன் கூறுபாட்டுக்கிசைந்த கூறுபாட்டையடைய மற்றைய இயந்திரங்கள் எத்துணைகாத தூரமிருந்தபோதிலும்,
அவைகளினிடத்திற்சென்று
அவைகளைத் தாக்கித் தன் செய்தியை அறிவிக்கின்றது.
இதே மாதிரியாய்த் தான் ஒருமனத்திலிருந்து புறப் பட் நினைவு எல்லா ஸ்தூல கட்டுப்பாடுகளையும் கடந்து இம்மனத்திற் கொத்த மனதிலெல்லாம் உதிக்கின்றது. (இன்னும் வரும்)
சந்தான கிருஷ்ணபிள்ளை.