பக்கம்:மறைமலையம் 15.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

233

ஒருவன் தன் சிநேகிதனைக்காண உடுத்தி வெளிப்புறப் படப்பாதி தூரத்திலேயோ அல்லது தன் இல்லத்தின் வாயிற்படியிலேயோ அவனைக்கண்டு "கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது” என்று குலாவுவது வெகு சகஜம். இனிச் சிலர் ஒருவனைக்காண எண்ணிக் கொண்டிருக்கும் போதே மற்றவன் தன்னிடத்திற்குத் திடீரென்று வர, நான் இப்பொழுது தான் உம்மைக் காண நினைத்துக் கொண்டி ருந்தேன். நீரும் வந்துவிட்டீர் என்று சொல்வதையும் காண்கின்றோம். சிற்சில சமயங்களில், ஒருவன் ஏகாக்கிர சித்தனாய்த் தன் வேலையைச் செய்வதிலேயே பரவச மடைந்தவனாய்த்தன் மனதிலாடிப் பாடிக்கொண்டிருக்கும் போது, யாரோ ஒருவரின் உருவம் தன் முன்னோ பின்னோ தோன்றத் தன்னை யறிந்தோர் யாரோ வந்திருக்கின்றனர் என்று அவ்வுருவத்தைத் தீண்டவும் அதனோடு பேசவும் முயன்று, ருவம் உடனே மறைந்து விட்டதைக் கண்டு அதிசயித்தும் வெட்கியும் போகின்றான். இனி இங்குத் தோன்றிய உருவம் னி யாது? தோன்றற்குக் காரணமென்னை? பின்பு இவ்வுருவம் மறைந்து விட்டதின் பொருளென்னை? இன்னுமிவ்வித சங்கைகளும் கேள்விகளும் ஒவ்வொருவர் மனதிலும் உதிக்கும்; உதித்தல் வேண்டும். ஆனால், அவற்றிற்குப் பின்வரும் அத்தியாயங்களிற்றான் விடைகள் மட்டுமேயன்றி, அவ்வித அனுபவங்களை ஒவ்வொருவரும் அடைதற்குச் சாஸ்திர யுக்தமானவையும், எம்முதுகுரவர் எமக்குக் கருணை வெள்ளப் பெருக்கால் அருளியனவும், இக்கலியுக நூதன வாழ்க்கைக்கு ஏற்றவையுமான சாதனங் களும் அப்பியாசங்களும்

விவரிக்கப்பட்டுள்ளன.

வி

ன்னுஞ் சிலர் ஏதோ ஒரு நற்கருமத்தை நாடி அதை மனதிலெண்ணி மிக ஊக்கமாய் அவ்வேலையே கவலையாய் அல்லும் பகலும் சதா அதையே ஸ்மரித்துக்கொண்டு தங்கள் எண்ணம் ஈடேறுமோ, ஈடேறாதோ என்று மனம் பதைத்துக் கனிந்து உளந்தடுமாறி, மெய் சோர்ந்து, வாய்பிதற்றி, ஈசா எம் காரியம் ஜெயமாமோ என்ற அதே நிமிஷத்தில் அசரீரியாய், “அஞ்சன்மின் ஜெயமாய் வருவீர்” என்று திவ்வியமங்கள வாக்குகள் பிறந்து சிரவண மனனா நந்தத்தை உண்டு பண்ணி யிருப்பதையும், அனுபவத்தி லறிந்திருப்பர். ஞானிகள் விவகாரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/266&oldid=1583328" இலிருந்து மீள்விக்கப்பட்டது