பக்கம்:மறைமலையம் 15.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

❖ 15❖ மறைமலையம் – 15

யாது? பரோபகாரமே, பரோபகாரசிந்தையே தொழிலாயுள்ள ஞானிகளின் திவ்விய எண்ணங்களானவை மிக்க ஆற்றலோடு சலுத்தப்படுவன வாதலால், அவை எவரிடத்தி லனுப்பப்பட்டனவோ அவரி டமணுகி வார்த்தை ரூபத்தை யடைந்து அவ்வார்த்தைக் கேற்ப ஆகாச அதிர்ச்சியை யுண்டாக்க, கிராமபோன் (Gramaphone) முதலிய இசைக் கருவிகளில் வார்த்தை ஒலி உண்டாவது போல, அவ்வதிர்ச்சியின் காரணமாய் ஓரொலி உண்டாகின்றது. மேற் கூறப்பட்ட அபய வாக்குகள் அப்படிப்பட்ட அரிய பெரியோர்களின் அநுக்கிரக எண்ணங்களின் வார்த்தை ஒலிப்பன்றோ?

ால,

இன்னும் இங்கு விவிலிய நூலிலும், நம் சாஸ்திரங் களிலும் ஆகாசவாணி அசரீரி கூறிற்று.தேவதூதரிடமிருந்து வாக்குகள் ஜனித்தன என்பனவற்றிற்கு முழு உண்மைப் ாருள் இப்போதேயுள்ள ஞான விளக்கத்தின் பயனால் எளிதில் புலப்படுமன்றோ.

ய்

இன்னும் பிரபல வித்வசிகாமணிகள் தங்கள் காவியங் களில் கதாநாயகன் நாயகிகளை வருணிக்கும்போது நாயகனும் நாயகியும் ஒருவரொருவரைக் கண்டு, களித்துக் கரைந்து பின்பு பிரிந்து, கரும்பு வில்லோன் ஐங்கணைகளின் வருஷங்களால் உடல் துளைக்கப் பெற்று. உன்மத்தரொப்பக் கனவிலும் நினைவிலும் பிதற்றி, ஒருவரொருவரை ஸ்மரித்துக் காண்டிருப்பதினால், ஒருவருருவம் மற்றவர் மனதிற் பதிந்து தாகவிடாய் மேற்கொண்ட காட்டுத் தனிவழிப் போக்கனுக்குக் கானல் தோன்றுமாறு, காம விடாய் மேற்கொண்ட இவர் காதுக்கு வேட்கை மிகுதி செய்யும் காட்சியாகிய ஒருவருக் கெதிரில் மற்றவர் தம் சூட்சும சரீரத்தோடு தோன்றுதல், பேசுதல், களித்தல், முதலியன நடப்பதாய் விவரிக்கின்றனர். எவ்வளவு உண்மை! மனோ சக்தியின் பிரபாவத்தை என்ன விதமாய் விளக்கு கின்றனர்! மனோ சக்தியானது, வஸ்துக் களைத் திரட்டி உருட்டி ஓருருவாய்ப் படைத்து மாயை தனக்கு ஏவல் செய்யுமாறு செய்தலுமன்றி எண்ணங்களையும் உருவப் படுத்தி ஒலிப்பித்து ஸ்பரிசம் ரசம், கந்த முதலியவற்றையும் மனதினாலேயே சிருஷ்டித்து உண்டு களித்துப் பரவச மடையும்படியும் செய்யா நிற்கின்றதே! இனி இங்குக் கூறப்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/267&oldid=1583329" இலிருந்து மீள்விக்கப்பட்டது