237
ஆகாரம் - 2 - 2
“ஊனைத்தின்றூனைப் பெருக்காமை முன்னினிதே" என்ற உண்மையால் மானிடர்க்குவரும் அநேக நோய் கட்கும், சாந்தமற்ற தன்மைக்கும் காரணமாய் உள்ளது பெரும்பாலும் மாம்ஸ பதார்த்த முண்ணுதலே.
ச
ஆதலின் மாம்ச பட்சணத்தைக் கண்டித்துக் கழித்துக் காய்கறி பதார்த்தமே உண்ணுதல்உத்தமம் என்று விளம்பல் வேண்டும்.
ஆதலால், முற்கூறியவாறு உணவு தக்கன வென்று தெரிந்தெடுத்து பின்னர் அவற்றை நாவுக்கு இனியபடி சமைத்து உண்பதே கட மை.
வ்வாறு நாம் உண்ணும் உணவை ஜீரணிக்கும் அவயவங்களின் நிலையை அறிந்து உண்ணுதல் உத்தமம்.
66
ஒருநாளுணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக் கேலென்றா லேலாய்--ஒருநாளும்
என்நோ அறியாய் இடும்பைக்கூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது.”
என்பது அளவுடன் உண்டு சரீரத்தைப் போஷிப்பதை
எடுத்துரைக்கின்றது.
தேஹத்திற்கு வேண்டு மவ்வளவும் கொடுத்தல் அவசியம். அவ்வாறு கொடாவிடின் நாளுக்குநாள் பலம் குன்றி rணதசையை அடைந்து நோய்களுக்கு இடமாகி விடும்.
க
தற்காலத்து அநேக நோய்கள் வறுமையால் உண்டா கின்றன வென்று தேக தத்துவ சாஸ்திரிகள் கூறுகின்றனர்.