241
உ
திருச்சிற்றம்பலம்
சாதிவித்தியாசமும் போலிச்சைவரும்
“சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள்
கோத்திரமுங் குலமுங் கொண்டென் செய்வீர்,
பாத்திரஞ் சிவமென்று பணிதிரேல்
மாத்திரைக்குள் ளருளும் மாற்பேறரே.”
அடியார்
திருநாவுக்கரசு சுவாமிகள்.
சைவசமயமானது சீவகாருணிய ஒழுக்கத்தையும் சிவபத்தி பத்தியினையும் போதிப்பதென்று உணரும் புண்ணியம் இல்லாத போலிச்சைவர் சிலர் சாதி வித்தியாசமே தாம் சைவ சமயத்தாற் பெறும் தத்துவஞானம் என்று மயங்கி உணர்ந்து, அம்மயக்க வுணர்ச்சியைத் தம்மிடத்தும் தம்மோடொத்தவரிடத்தும் வைத்து மகிழ்வ தோடு திருத்தி பெறாமல், அதனைத் தமக்கு இசைந்த பத்திரிகைகளினும் எழுதி வெளியிடுவித்துச், சைவ வுண்மை களை உள்ளவாறே எடுத்துப் போதித்துவரும் தவ வொழுக்க முடைய பெரியாரையும் தமக்குள்ள பொறாமையாலும் வஞ்ச இழிகுணத்தாலும் தமக்குத் தோன்றிவாறெல்லாம் இகழ்ந்து பேசுகின்றார். ஒருவருடைய உயர்வுந் தாழ்வும் அறிவான் மிக்க சான்றோர் மதிக்க வேண்டுமே யல்லாமல், அறிவில்லாக் குறும்பர் மதிக்கற் பாலரல்லர்; ஆகவே, அறிவில்லார் கூறும் இகழுரைகளையும் பொய்ப் பிரசங்கங்களையும் அறிவு டையார் ஒரு பொருட்டாக க எண்ணா ராகலின் அவர் கூறும் பழிச்சொற்களை விடுத்து, அவர் கூறும் மற்றப் பகுதிகளில் உள்ள குற்றங்களை மாத்திரம்