பக்கம்:மறைமலையம் 15.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மறைமலையம் – 15

ஒரு சிறிது எடுத்துக் காட்டுவாம். அவர் உரைத்தவற்றில் உள்ள குற்றங்கள் அனைத்தும் அறிவு டையார் தாமே உணர்வ ராகலின், ஏனைச் சாமானியர் அவர் கூறியவற்றைக் கண்டு மயங்காமைப் பொருட்டு இங்கு இதனை எழுதுவே மாயினேம்.

சாதி வித்தியாசம் பழையகாலந் தொட்டே வேதம் முதலான நூல்களிற் காணப்படுகின்றதாகலின், அந்நூல் களைப் பிரமாணமாகக் கொண்டவர்கள் அவ்வித்தி யாசத்தை அனுசரித் தொழுகுதலே செயற்பால தென் கின்றார்.

சாதி வித்தியாசம் பழமையாக உள்ளது பற்றியே அதனைத் தழுவியொழுகல் வேண்டு மென்பது பகுத்தறி வில்லார் கூற்றாம். பழையன வெல்லாம் நல்லனவாதலும் இல்லை, புதியன வெல்லாம் தீயன வாதலும் இல்லை; பழையனவற்றில் தீயனவும் உண்டு புதியனவற்றில் நல்லனவும் உண்டு. இவ்வுண்மையைச் சைவ சித்தாந்த ஆசிரியருள் ஒருவரான உமாபதி சிவாசாரிய சுவாமிகள் “தொன்மைய வாம் எனும் எவையும் நன்றாகா இன்று தோன்றிய வாம் எனும் எவையும் தீதாகா.” என்று உபதேசித்தருளியதுங்

காண்க.

மனிதருடைய நாகரிக வளர்ச்சிக்கும்

அறிவின்

மேன்மைக்கும் ஏற்பக் காலந்தோறும் பழைய ஏற்பாடுகள் அழிந்து போதலும் புதிய ஏற்பாடுகள் புகுந்து பொருந்து தலும் இயற்கையாம். இவற்றை உலகத்தார் தழுவி நடந்து வரும் வகைகளை யெல்லாம் சொல்லப் புகுந்தால் இது மிக விரியும். இது பற்றியன்றோ "பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல கால வகையினானே" என்னும் விதியும் எழுந்தது.

ஆகவே, சாதி வித்தியாசம் பழையகாலந் தொட்டு இருத்தல் பற்றியே அதனை விடாது கைப்பற்றி யொழுகல் வேண்டுமென்பது சிறிதும் பொருத்தமில்லாத போலி

யுரையாம்.

இனிச் சாதி வித்தியாசம் பழமை தொட்டே உள்ள தென்பதும் அறிவில்லாக் கூற்றாம். மிகப் பழைய நூலாகிய இருக்கு வேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்களினும் சாதி வித்தியாசத்தைப் பற்றிய குறிப்பு ஒன்றுமே காணப்பட வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/275&oldid=1583338" இலிருந்து மீள்விக்கப்பட்டது