பக்கம்:மறைமலையம் 15.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முன்பனிக்கால உபந்நியாசம்

6

243

ஈசகேனகடம் முதலான பழைய உபநிடதங்கள் தோன்றிய காலத்தும் நால்வகைச் சாதி வகுப்புக் காணப்படாமல், பிராமணர் ராஜந்யர் என்னும் இரண்டு பிரிவு மாத்திரமே காணப்படுகின்றது. இவ்விரண்டு பிரிவும் அவ்வவர் தொழில் பற்றி வந்தனவே யல்லாமல், அவர் தமக்குள் வேறு எவ்வகையான வித்தியாசமும் இருந்ததாகத் தெரியவில்லை. வேள்வி வேட்டலும் நூல் ஓதுதலுமாகிய தொழிலைச் செய்பவர் பிராமணர் என்றும், போர் புரிதலும் நாடு காத்தலுமாகிய தொழிலைச் செய்பவர் ராஜந்யர் அல்லது க்ஷத்திரியர் என்றும் வகுக்கப்பட்டனர். இங்ஙனம் வகுக்கப்பட்டாலும் அவர்கள் அவ்வத் தொழில்களையே செய்ய வேண்டுமென்னும் கட்டுப்பாடு சிறிதும் இருந்த தில்லை. துரோணரும் அவர் ஆசிரியர் அக்கினிவேசரும் அவர் புதல்வர் அசுவத்தாமரும் அவர் மைத்துனர் கிருபரும் போன்ற பிராமணர் போர்த்தொழில் பயின்றமையும், பிரியமேதர் சினி கார்க்கியர் திரையாருணி முதலான க்ஷத்திரியர் நூல்கள் ஓதிப் பிராமணரானமையும் மேற் கூறியதனை நாட்டுவதற்குப் போதுமான சான்றாம். இவை மாத்திரம் அல்ல. இவ்விரு வகுப்பாரும் ஏதும் வேறுபாடின்றி ஒன்று சேர்ந்து உணவருந்தியும், பெண் கொண்டு கொடுத்தும் ஒருமையாய் வாழ்ந்து வந்தார்கள். விதர்ப்பன் என்னும் க்ஷத்திரியன் புதல்வியை அகத்தியர் மணந்து கொண்டார்; உலோமபாதன் புதல்வியை இருசிய சிருங்கள் மணந்து கொண்டார்; இங்ஙனமே ராஜந்யர் புதல்விகளைப் பிராமணர் மணந்து கொண்ட வரலாறுகள் எண்ணிறந்தன இருக்கின்றன. இனிப் பிராமணர் புதல்விகளை மற்றை வகுப்பாரான ராஜந்யர் L மணந்து காண்ட வரலாறுகளும் பல இருக்கின்றன. சுக்கிராசாரியர் என்னும் பிராமணர் தமது புதல்வியை யயாதி என்னும் அரசனுக்குக் கொடுத்தார்; மற்றொரு பெண்ணை அனூகனுக்குக் கொடுத்தார். இங்ஙனமே ஞானோபதேசங் களும் வித்தியாசமின்றிச் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. ஜனகராஜன் பிராமண முனிவர் பலர்க்கு ஞானோபதேசஞ் செய்தனன்; பாலாகி என்னும் பிராமண ருஷி அஜாத சத்துரு என்னும் அரசனால் ஞானோபதேசஞ் செய்யப்பட்ட வரலாறு பழைய உபநிடதங்களிற் காணப்படுகின்றது. இவ்வுண்மை

6

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/276&oldid=1583339" இலிருந்து மீள்விக்கப்பட்டது