பக்கம்:மறைமலையம் 15.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

❖ - 15❖ மறைமலையம் - 15

களால் இருக்கு வேதத்திற்குப் பின் உபநிடதங் கள் எழுந்த காலத்தில் பிராமணர் க்ஷத்திரியர் என்னும் இரண்டு வகுப்பே இருந்தன வென்பதும், அவ்விரண்டு வகுப்பும் தொழில் பற்றி உண்டாயினவே யல்லாமல் பிற்காலத்திற் போலப் பிறப்பு மாத்திரத்தால் உண்டாயின வல்லவென்பதும், அவ்விரண்டு வகுப்பாரும் தமக்குள் ஏதும் வித்தியாசமின்றி உண்ணல் கலத்தல்களால் ஒருமித்து வாழ்ந்தனர் என்பதும் இனிது விளங்கும்.

இனிப் புராணங்கள் இதிகாசங்கள் தோன்றிய காலத் திலே தான் பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரா என்னும் நான்கு வகுப்புகள் பிரிந்தன. இந்நால்வகைச் சாதியாரும் ஒரே தந்தைக்குப் பிள்ளைகளாய்ப் பிறந்து நால்வேறு தொழிலால் நால்வகைப்பட்டார்களே யல்லாமல் அவர்களுள்ளும் உண்ணல் கலத்தல்களில் ஏதும் வித்தியாசம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. சிரார்த்த காலங்களிற் பிராமணன் வீட்டில் சூத்திரன் சமையல் செய்து அன்னம் பரிமாறியமுறை பழைய கற்பசூத்திரங்களிற் சொல்லப் பட்டிருக்கின்றது. இதற் கிணங்கவே வாயு புராணத்தும் பின் வருமாறு சொல்லப் பட்டிருக்கின்றது; “கிருத யுகத்தின் கண் சாதிகள் ஏதுமே இல்லை; அதன்பின்னர் பிரமதேவர் அவ்வவர் தொழில்களுக்கு ஏற்ப மனிதருள் நான்கு வகுப்பு கள் ஏற்படுத்தினார். பிறரை ஆளுவதற்கேற்ற வீரச்செய்கை யுடையவர்களைப் பிறரைக் காக்கும் பொருட்டு க்ஷத்திரிய ரென்று நியமித்தார். தந்நலம் பாராட்டாமல் பிறர்நலங் கருதி உண்மையே பேசி வேதத்தைச் செவ்வையாக ஓதினவரைப் பிராமணர் என வைத்தார். முன்னே வலியற்றவர்களாய் நிலத்தை உழுவதிலும் கைத்தொழில் புரிவதிலும் தலையிட்டு உழவினால் உயிர் வாழ்க்கைக்கு வேண்டுவனவற்றை எடுத்துத் தந்தவர்களை வைசியர் என வைத்தார். சுத்தஞ் செய்பவர் களாய் ஏவிய தொழில் மாத்திரஞ் செய்யும் வலியற்றவர் களைச் சூத்திரர் என்று வைத்தார்,” இவ்வாயு புராண வாக்கியங்களுள் சாதியானது தொழில்பற்றி வந்ததென்று சொல்லப் பட்டிருக்கிறதே யல்லாமல், பிறப்பினால் வந்ததென்று சிறிதும் சொல்லப்படவில்லை. இனி இந்நால்வகைச் சாதியாருள்ளும் எவர் உயர்ந்தோர் எவர் தாழ்ந்தோர் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/277&oldid=1583340" இலிருந்து மீள்விக்கப்பட்டது