பக்கம்:மறைமலையம் 15.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

245

வினாவுங்கால், ஒழுக்கத்தால் மிக்கவரே உயர்ந்த சாதியா ரெனவும், ஒழுக்க மில்லாதவரே தாழ்ந்த சாதியாரெனவும் மகா பாரதம் சாந்தி பருவத்தின் கண் நிச்சயித்துரைக்கப் பட்டிருக்கின்றது. அப்பகுதி வருமாறு:

"பரத்துவாச முனிவர் பிருகு முனிவரை வினாவு கின்றார்.”

"நால்வகைச் சாதி வித்தியாசத்திற்கும் நிறந்தான் காரணமென்று சொன்னால் எல்லாச் சாதியுள்ளும் நிறங்கள் பலதிறப்பட்டுத் தோன்றுகின்றன”.

66

“அவாவுங் கோபமும் அச்சமும் பேராசையும் சஞ்சலமும் கவலையும் பசியும் களைப்பும் நம்மெல் லாரிடத்தும் மிகுந்து தோன்றுகின்றன; இங்ஙனமாயின் சாதிப் பகுப்பு எவ்வாறு பொருந்தும்?”

66

அசையும் பொருளும் அசையாப் பொருளுமாகிய வகைகளும் எண்ணிறந்தனவாயிருக்கின்றன; இப்பகுப்புகள் பலவற்றுள்ளும் சாதி நிர்ணயம் செய்தல் எங்ஙனம்?”

66

இவற்றிற்குப் பிருகு மறுமொழி கூறுகின்றார்.

"சாதி வித்தியாசம் என்பது ஒன்றில்லை. உலகமுழுதும் பிரமாவாற் சிருட்டிக்கப்பட்டமையால் ஆதியில் எங்கும் பிராமணர் மாத்திரமே இருந்தார்கள். தொழில்களினாலேயே சாதிகள் உண்டாயின.

66

ஆசைப்பட்ட பொருள்களை அனுபவிப்பதிற் பிரிய முள்ளவர்களும், கொடுமையும் இச்சையும் இச்சையும் உள்ளவர்களும், இச்சிக்கப்பட்ட பொருள்களைப் பெறுவதில் ஊக்கம் வாய்ந்த வர்களும் தாங்கள் செய்தற்குரிய கடமைகளை விட்டவர் களும், செந்நிறம் வாய்ந்தவர்களும் ஆனது விஜராகிய பிராமணர் க்ஷத்திரியருடைய நிலைமையை அடைந்தார்கள்.'

66

ஆடு, மாடு மேய்க்குந் தொழிலை மேற்கொண்டவர் களும், மஞ்சள் நிறம் வாய்ந்தவர்களும், உழவுத் தொழிலாற் சீவிப்பவர்களும், தம்முடைய கடமைகளில் நில்லாத வர்களும் ஆன துவிஜராகிய பிராமணர் வைசியருடைய நிலையை அடைந்தார்கள்.”

66

காலை செய்வதிலும் பொய் கூறுவதிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/278&oldid=1583342" இலிருந்து மீள்விக்கப்பட்டது