246
❖ - 15❖ மறைமலையம் - 15
பிரியமுள்ளவர்களும், பேராசை பிடித்தவர்களும், எல்லா வகையான தொழில்களையும் செய்து அவற்றால் சீவிப்பவர் களும், கரிய நிறம் வாய்ந்தவர்களும், சுத்தம் சுசி இல்லாத வர்களும் ஆன துவிஜராகிய பிராமணர் சூத்திரருடைய நிலைமையை அடைந்தார்கள்.”
66
னது
ய
இத்தகைய தொழில்களால் பிரிக்கப்பட்டுத் துவிஜர் கள் சாதிகளாக வகுக்கப்பட்டனர்”
ஐந்தாம் வேதமாகிய பாரதத்திலே பரத்துவாச பிருகு சம்வாதமாக ஏற்பட்ட இந்தப் பகுதியினால் சாதி வகுப்பு ஒழுக்கத்தினால் வகுக்கப்பட்டதே யல்லாமல் பிறப்பினால் அன்றென்பது இனிது விளக்கப்பட்டிருக்கவும். அதனைச் சிறிதும் அறியாமல் பிறப்பினாலேயே நாம் உயர்ந்து விட்டோம் என்று தருக்கினாற் புலம்பிச் சாமானியரை வஞ்சிக்கும் போலிச் சைவர் என்கடவரென்க.
மேற்கூறிய வடமொழி வேதவுரைகள் ஒழுக்கத்தினால் மாத்திரமே உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்பன வகுக்கப்படும் என்று கூறியதுபோலவே தமிழ் வேதமாகிய திருக்குறளும்
“பிறப் பொக்கும் எல்லா வுயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால்'
என்றும்,
“ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்,"
என்றும்,
"மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர், கீழிருந்துங்
கீழல்லார் கீழல்லவர்.
என்றும்,
وو
(குறள் 972)
(குறள் 133)
ஓதினமை காண்க. இவைதாம் தெரிதற்குரிய பெருங்கல்வி போலிச் சைவர் மாட்டில்லை யாயினும், பள்ளிக்கூடச் சிறுவர் நாடோறும் ஓதிவரும்,
“சாதி இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால்