252
❖ 15❖ மறைமலையம் – 15
அறிவுடையார் ஒருவர் மதித்தலே உயர்ந்ததாகுமென்று உணர்மின்கள்!
அங்ஙனமாயின் “இழியாக்குலத்திற் பிறந்தோம்” “குலம் பொல்லேன்” என்று சமயாசாரிய சுவாமிகள் குலத்தின் உயர்வையும் தாழ்வையும் எடுத்துக்கூறியது என்னையெனின்; சீவகாருணிய ஒழுக்கத்தில் மிகுந்து சிவபக்தி அடியார் பத்திகளிற் சிறந்த குலத்திற் பிறந்தோம் என்றும், அவ்வொழுக்கங்கள் இல்லாத குலத்திற் பிறந்தோம் என்றும் பொருள் கூறுதலே ஆசாரியசுவாமிகள் கருத் தென்று துணிக. இவ்வுண்மையுணராது பிறப்பினாலேயே குலப்பெருமை சொல்லுவார் அறியாமையைச் "சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள், கோத்திரமுங் குலமுங் கொண் டென்செய்வீர்” என்று ஆசாரிய சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருவாக் கால் உற்றுணர்ந்து தெளிக. பிறப்பினாற் சைவரென்று தம்மை உயர்த்துச் சொல்லிக் கொள்வோரிற் சிலர் சீவகாருணியமும் சிவபத்தி அடியார் பத்திகளும் இல்லாதாய், அகங்கார மிகுந்து பொய்யும் புனைவும் வஞ்சமும் பொறாமையும் நிரம்பிப் பிறரைக் கொல்லாமற் கொல்லுவதில் கருத்தூன்றி அலை கிறார்கள்; இத்தன்மையோரை உயர்ந்தகுலம் என்றுகூற அறிவுடை யோர்க்கு நா எழுமா? உலகத்தாரும் அறிவுடை யாரும் ஒருவன் பிறப்பை நோக்காது அவன் நற்குணம் உள்ளவனா? நல்லொழுக்கம் வாய்ந்தவனா? என்றன்றோ வினாவுகின் றார்கள். ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனா ரும் தாம் குடிமை என்னும் அதிகாரத் தில் உயர்குலம் இழி குலம் என்றன ஒழுக்கத்தாற் சிறந்த குலம் ஒழுக்கத்தாற் றாழ்ந்தகுலம் என்று வெள்ளிடைமலைபோல் விளங்க உரைத்தாராகவும், ஆசிரியர் கருத்தறிந்த பரிமேலழகி யாரும்
நான் கு வருணத்திலும் உயர் குலமும் தாழ்குலமும்
உண்டென்பதை விளக்கினாராகவும் அவற்றை அறியும் அறிவு சிறிதுமில்லாத போலிச்சைவர் குலம் பிறப்பினாலே தான் என்று நாயனாருஞ் சொன்னாரெனத் தமக்குத் தோன்றிய வாறெல்லாம் பிதற்றுவர். அவர் பிதற்றுரையின் பொய்ம் மையை யாம் மேலே எடுத்துக் காட்டிய