254
❖ - 15❖ மறைமலையம் - 15
சாதியாரெல்லாம் ஒன்றுகூடி வசிக்கும் நாடு நகரங்களுக்குப் புறத்தே விலக்கமாகப் பறைச்சேரி அமைக்கப்பட்டிருத்தலும் இந்தக்காரணம் பற்றியே தான். இத் தன்மையதான அறிவில் லாப் புலைச் சாதியில் நந்தனார் பிறந்தமையினாலே இவரது பெருமையைப் பிறர் அறியார் அறியார் என்றெண்ணி
அதனை
அறிவிக்கும் பொருட்டே சிவபெருமான் அங்ஙனஞ் செய்தன ரென் றுணர்க.
அல்லதூஉம், சிவபக்தியின் மேன்மையை அறிவித்தற் கும், சிவபக்தி உண்டானால் புலையுடம்பும் புண்ணிய யுடம்பாம் என்பதனை உலகத்திலுள்ள எல்லார்க்கும் தெளிவித்தற்குமே சிவபெருமான் நந்தனாரை நெருப்பில் முழுகுவித்து எழச்செய்தார் என்க. அவ்வாறானால், மாமிசம் உண்ணும் மற்றைச் சாதியாரும் மாமிசத்தை விட்டுச் சிவபக்தியில் மேம்படுவாராயின் அவரைச் சைவர்கள் அங்கீகரிக்குமுன் சிவபெருமான் அவர் பெருமை யை அங்ஙனமே ஓர் அற்புதத்தால் அறிவிக்க வேண்டு மெனின்;--சிவபத்தியிற் சிறந்த அடியார்க்குப் புலையுடம்பு புண்ணிய வுடம்பாம் என்பதனை ஒரு காலத்து ஓரிடத்து ஓர் அற்புதத்தால் தெளியச் செய்தால், அதனைப் பிற்காலத்து வருவோர் அங்கீகரித்துப் பின்னர் அடியார் பணிசெய்து நடக்க வேண்டுமே யல்லாமல் ஒவ்வொரு முறையும் அற்புதஞ் செய்து காட்டினால்தான் இவரை அடியார் என்று அங்கீகரிப்போம் என்றல் அறிவில்லா விழலர்கூற்றாய் முடியும்; திருஞான சம்பந்தப் பெருமான் சைவ சமயமே, மெய்ச் சமயம் என்பதனைச் சுரநோய் விலக்கியும் அனலில் ஏடெழுதியிட்டும் புனலில் ஏடெழுதிவிட்டும் அற்புதத்தால் விளக்கியருளினார்; அதுபோலவே, இப்போது சைவ சமயமே மெய்ச்சமயம் என்று தாபிக்க வருகிறவர்களும் அற்புதங் காட்டினால்தான் ஏற்றுக் கொள்வோம் என்று கூறுவாருண்டோ? இல்லையே. அங்ஙனமே, சிவபத்தி யுடையார்க்குப் புலையுடம்பும் புண்ணிய வுடம்பா மென்பதை நந்தனாரைக் கொண்டு அற்புதத்தால் சிவ பெருமான் ஒருமுறை விளக்கிக் காட்டினால் அவ்வாறே பலமுறையும் விளக்க வேண்டுமென்று அறிவுடையோர் கூறார். அகத்தேயுள்ள சிவபக்தி என்கின்ற சிவாக்கினியினால் சிவனடியாருடம்பு பரிசுத்தமுடைய ஞானசரீரமாகும் என்பதனையே நந்தனார்
ஏ