பக்கம்:மறைமலையம் 15.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

255

புறத்தே நெருப்பிற் குளித்த அற்புதம் விளக்குவதாகும். சிவபக்தியுடையார்க்குக் கருவி காரணங்க ளெல்லாம் சிவமயமாய் விளங்குமாகலின் அவரைப் பிறப்பு நோக்காது சிவமாகவே கொண்டு வழிபடல் வேண்டு மென்னும் உண்மையை உணர்த்துதற் கன்றோ, திருநாவுக்கரசு சுவாமிகள்,

66

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து தரணியொடு வானாளத்தருவரேனும், மங்குவாரவர் செல்வம் மதிப்போ மல்லோம் மாதேவர்க் கேகாந்தரல்லராகில், அங்கமெலாங் குறைந்தழுகு தொழு நோயராய் ஆவுரித்துத்தின்றுழலும் புலையரேனுங், கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்ப ராகில் அவர் கண்டீர் யாம் வணங்குங் கடவுளாரே.’

என்று அருளிச் செய்தனர். இங்ஙனமே, “யச்சண்டாள சிவ திவாசம்” என்னும் முண்ட கோபநிடத வசனமானது எவன் ஒருவன் சிவ என்னும் மொழியைச் சொல்லுகின் றானோ அவன் சண்டாள வமிசத்திற் பிறந்தவனா யிருந்தாலும் அவனோடு பேசுக, அவனோடு வசிக்க, அவனோடு அருகிருந்து உண்ணுக என்று கூறுகின்றது. இங்ஙனமே,

‘புலையரே யெனினும்ஈசன் பொலன்கழ லடியிற்புந்தி நிலையரே லவர்க்குப்பூசை நிகழ்த்துதல் நெறியேயென்றுந் தலையரே யெனினும்ஈசன் றாமரைத்தாளின் நேசம் இலரெனில் இயற்றும்பூசைப் பலந்தருவாரே யாரே?'

என்று சிவதருமோத்தரமும்,

“எள்ளற் படுகீழ் மக்களெனும் இழிந்தகுலத்தோரானாலும் வள்ளற் பரமன் றிருநீறு மணியுமணிந்த மாண்பினரை யுள்ளத்துள்ளே யிருபோது முணர்ந்து தெருண்டு சிவனெனவே கொள்ளத்தகைய அறிவினரே பிறவிக்கடலிற் குளியாதார்.”

என்று பிரமோத்தர காண்டத்தும் சொல்லப்பட்டிருத்தல் காண்க.

வைபோலுந் திருவாக்குகளுக் கெல்லாம் வழி சொல்லத் தெரியாத போலிச்சைவர் பத்தியினாற் செய்வன வற்றிற்கு விதி விலக்கு இல்லை, மற்றை உலவழக்கத்தில் சாதி வித்தியாசம் பாராட்டியே வரல் வேண்டும் என்கின்றார். உலக வழக்கிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/288&oldid=1583352" இலிருந்து மீள்விக்கப்பட்டது