258
❖ மறைமலையம் - 15
கோமுட்டிகள் வாணிகர் முதலா யினார் தம்மைத் தனவைசியர் எனவுஞ் சொல்லிவருகின்றனர். வேளாளரில் ஒருவரும் தமது சாதியாரை வைசியர் என எழுதியிருக்கின்றார். நாட்டுக் கோட்டைச்செட்டிமாரும் தம்மைத் தன வைசியரென்று எழுதிவருகின்றார். பறையர் வகுப்பிற் கல்வியிற்றேர்ந்தவர்கள் தம்மைப் பிராமணரினும் மேலானவர் என்று சொல்வ தோடு, "பார்ப்பானுக்கு மூத்தான் பறையன் கேட்பாரில் லாமற் கீழ்ச்சாதியானான். எனப் பிரமாணங்களுங் காட்டு கின்றார்கள்; இப்பறையரிற் கல்வியினுஞ் செல்வத்தினும் உயர்ந்த பிரபுக்கள் கடைவாயிலிற் காத்திருந்து அவர் இடுவனவற்றைப் பெற்று மகிழ்ந்துவரும் வேளாள வித்துவான்கள் எத்தனைபெயர்! போலிச்சைவர் எத்தனைபெயர்! அவர்கள் மேற்பாட்டுகள் பாடினவர்களும், பாடுகிறவர்களும் எத்தனை பெயர்! இவ்வாறெல்லாம் அவர்கள் வீசி எறிவனவற்றைக் குனிந்து பொறுக்கியுண்டு வயிறு கழுவி வரும் போலிச்சைவர் முதலாயினார் புறத்தேவந்து நன்றிமறந்து அப்பிரபுக்களைப் பறையரென இகழ்ந்துரைப்பது எவ்வளவு பேதைமை! சைவ சமயத்திற் சேர்ந்த பறையரையும் சான்றாரையும் கோயிற் கோபுர வாயில் களினும் நெருங்க விடாத போலிச்சைவர் முதலாயினார், அன்னிய சமயத்தினராய் எல்லாவகையான மாமிசமும் உண்ணும் கிறிஸ்துவ மகமதிய அதிகாரிகள் வந்தால் அவர்கள் முன் பல்லை இளித்துக்காட்டி அவர்களைக் கோயிலுனுள்ளே அழைத்துச் செல்வது என்னை! இங்ஙனமே இன்னும் போலிச்சைவர் முதலா யினார் மற்றை யோரிடத்து வஞ்சமாய் நடக்கும் படிற் றொழுக்கத்தை விரிக்கப்புகுந்தால் து மிகவிரியும். அது நிற்க.
னிச் சிவபெருமான் பிறப்பினால் உயர்ந்தவர்களுக்குத் தனது அருளை வழங்கியது யாண்டும் இல்லை. அன்பினாற் சிறந்தவர்கள் எப்பிறப்பினராகப் பிறராற் கருதப்படினும் அதனைத் தான் சிறிதும் பாராதே அவர்களுக்கே தனது பேர் அருளை வழங்கிவருகின்றான். இதற்குப் பெரிய புராணத் தின்கண் பல்வகைப் பிறப்பினரான அடியார்கள் எல்லாரும் அவனது திருவருளைப் பெற்றமையே பெருஞ்சான்றாம். மேலும், பிறப்பினால் தம்மை உயர்ந்தோராகக் கருதி அகங் கரிப்போர் அகங்காரத்தை வேரோடும் அறுத்து அவரை