பக்கம்:மறைமலையம் 15.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

269

சிசுவினது உருவமும் முகத்தின் வனப்பும் தாயினுடைய தோற்றத்தைச் சார்ந்திருப்பதில்லை. உருவம், அழகு இவைகளைப் பற்றித் தன்னிலுண்டாம் உணர்ச்சிகள் தனது சிசுவின் நன்மைக்காகுகவென்று ஏவுதல் அவசியம். நல்ல பாவனா சக்தியைக்கொண்ட எந்தத் தாயும் இதை எளிதில் செய்யலாம். இந்தச் சக்திகுன்றியவர்களோ, பொறுமையாகக் கற்று அவ்வாறு செய்யலாம்.

சங்கீதம் வாயுவை அசைப்பிக்கிறது. இந்த அசைவால் ஆகாயத்திலுள்ள பரமாணுக்கள் அலைகளாயெழும்பு வதினாலுண்டாம் நாத அசைவுகள் தாயின் மனத்தைத் தாக்கும்போது இவள் இனிய ஓசை லயம் ஆகியவற்றை தேஜசனில் உணர்கிறாள். இந்த உணர்ச்சியைக் கொண்டு சிசுவை இராகாதி இனிய ஓசைக்குப்பண்படும்படி செய்வித்துச் சங்கீதத்துறைக்குற்ற தகுதி சிசுவுக்கு அமையும்படி செய்யலாம்.

L

சிசுவின் மனத்தை உருப்படுத்துவதில் தாயானவள் பாரமார்த்திக விஷயத்தின் பெருமையைக் கவனத்தில் கொண்டவளாயிருப்பது அவசியமென்று கருதப்படுகிறது. சன்மார்க்கத்துக்கிசைந்த மனோதத்துவங்களை யடையும்படி

உதவிபுரியும்

ஏதுக்கள் எவை வ யென்றால் ஒழுங்குக்கு மாறுபடாத சிந்தனை, ஈசனோடு ஐக்கியம் பெறும் அப்பியாசம், பிரபஞ்சலயப் பிரமாணத்திற்கு முற்றும் ஒத்தவனே யன்றி வேறல்லேன் என்ற எண்ணம், கூடுமானவரை பெருந்துறை உயர்நோக்கு இவைகளிலேயே சிந்தை செல்லும்படியாய் நற்பாட்டையே கேட்பதில் விருப்புற்ற அறிவைப்பெறமுயற்சிப்பது; ஆகிய இவைகளே, தாயான வள் தற்போதனையின் ஆற்றலும் அதைப்பற்றித் தேறத் தெளிந்த அறிவுமுடையவளாயின் தன் குமாரன் பிறப்பதற்கு முந்தியே அவன் இனிச் செய்யவேண்டிய தொழிலையும் அவனுக்கு நிர்ணயிக்கலாம்.

முதலாவது செய்யவேண்டிய தற்போதனை சிசுவின் தேகாரோக்கியம், நேர்மனம் ஆகிய இவைகளைப் பற்றிய தாகும். இவ்விரண்டின் விஷயமாய் இன்னின்ன விதமாய் வைகளிருக்கவேண்டுமென்று தாயானவள் எவ்வளவுக்கு வற்புறுத்துகிறாளோ அவ்வளவுக்கு நலமுண்டாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/302&oldid=1583366" இலிருந்து மீள்விக்கப்பட்டது