272
❖ - 15❖ மறைமலையம் - 15
ஏற்றவண்ணம் தீர்ந்ததான மனோபாவங்களைச் செய்து எவ்வாறு அமைப்பானோ அவ்வாறு தாயானவள் தன் பிள்ளை இனி நடத்தவேண்டு மென்று தான் கருதும் தொழிலைப்பற்றிய தீர்ந்த எண்ணங்களைத் தன் மனத்தில் கொள்வது அவசியம். நூதனமாக ஏற்படுத்தும் ஓர் யந்திரத்தைப் பற்றி ஆக்குவோன் எவ்வண்ணம் அதனது அமைப்பைப் பற்றிச் செவ்வனே சிந்தித்த பின் அதை வெளிப்படுத்துவானோ அவ்வண்ணமே தாய்மார் தாம் பெறும் புதல்வர் புத்திரிகள் விஷயத்திலும், இவ்வித சிறப்பு வாய்ந்தவர்களாயிருக்க வேண்டுமென்று தம்மனத்தின்கண் அமைத்து அவர்களை யுருப்படுத்துவார் களாயின், இப்போது திக்கும் சிசுக்களை விட நற்சிசுக்கள் உண்டாவார்கள்.
ஓர்
ஒழுங்கைப்
மனப்பூர்வமாய் பற்றினவளாய் அதற்கிசைந்து தன் சிசுவை உருப்பெறும்படி செய்யாத தாய்க்குண்டாம் குழந்தை எது போன்றதாகுமென்றால் நந்தவனத்தில் ஏதோர் ஒழுங்குமின்றி நடப்பட்ட வித்து களினின்று உண்டாம் செடிகள் முளைத்துப் புல் பூண்டு களாகிய கிளைகளுடன் வளர்வது போலாம்.
ய
தாய்மார்களின் பூஜாபலனைப் பெறாத பிள்ளை களுக்குத் தம் லவுகீக விவகாரங்களில் நேரும் தங்கு தடங்க லாகிய விக்கினங்கள் தம் தாய்களின் நல்ல பூஜாபலனைப் பெற்ற பிள்ளைகளுக்கு நேரா. தம் தாய் மதப்பற்றுள்ளவளா யிருந்த காரணத்தைப் பற்றி அவளுக்குப் பிறந்த நால்வரும் ஆசாரியஸ்தானங்களை வகிக்கும் படியான ஓர் குடும்பமுண்டு, பிள்ளைகள் பிறப்பதற்கு முந்தித் தாய் கொண்ட மனச்சார்பின் பலனாக ஒருத்தி குமாரன் வைத்திய முறையை யடைந்த வனானான். மற்றொருத்தி கொண்டிருந்த விருப்பத்திற்குத் தக்கபடி நீதி பரிபாலன துறைக்கடுத்த சட்டங்களை ஓதப்பிரியங்கொண்ட குமாரனைப் பெற்றாள். இவ்விதமாகச் சாட்சி பகரும் குடும்பங்கள் பலவுள. தாய்கொண்ட சிறிது மனச்சார்புக்கே இவ்வளவு இவ்வளவு பிரயோசனமானால் தனது குமாரனின் உலக விவகாரங்களில் இன்னின்னமுறை வகிக்க வேண்டுமென்று மனங்கொண்டு செய்யும் தவப்பயனுக்கு எவ்வளவு நன்மை யுண்டாம். தாய்கொண்ட மனோ பாவனைகள் அல்லது இலட்சியங்கள் பிறந்தவர்கள் மூலமாய்