முன்பனிக்கால உபந்நியாசம்
273
நிதர்சனமாய் வெளி யாகின்றன. உதாரணமாகத் தாமஸ் எடிஸன் என்போர் கற்பனாசக்தியே உருவெடுத்து வந்தவரென் றெண்ணப் படுகிறார். மூடி யென்பவர் தர்மமே அவதார மென்றும், (Hadly, Harper) ஆட்டிலி, ஆர்ப்பர் என்னும் இரு அக்கிராசனாதிபதிகளும் பண்டித திறமைக்கு இலக்கண மென்றும் கருதப்படுகிறார்கள். கடந்த வருஷங்களில் தாயானவள் நன்மை பரிசுத்தம் ஆகிய இவைகளுக்கு இலட்சிய மாக நிற்கும் புண்ணிய சீலரான ஆசாரியரைச் சந்தித்திருக்கலாம். அதுகாரணமாய்ப் புத்திரன் வாய்ந்தி ருக்கலாகும். நமது நாட்டில் பெருமை பெற்று விளங்கிய சங்கரர், இராமானுஜர், நந்தனார் முதலியோரைப் பெற்ற தாய்மார்களும், அவரவர் காலத்தில் வேதாந்த விசாரணை யிலும், பக்தியிலும் சிறந்தவர்களாகிய மகான் களைக் கண்ணுற்றுத் தமக்கு மிப்படிப்பட்ட புத்திரப்பேறு வாயாதா வென்று அல்லும் பகலும் திண்ணமாய் எண்ணி யிருக்கக் கூடும். ஆண்சிசுவை அபேட்சித்தபோது ஆண்மையில் விளங்கினவர் களாய்த் தம்மைப் பின்பற்றும்படி நடந்து கொண்டவர்களைப் பற்றிய நினைவு தாய் மனத்தில் குடிகொண்டிருக்கவேண்டும். அவ்வாறே பெண் விஷயத் திலும், பெண்மையில் சிறந்த வழிகாட்டிகளா யுள்ளவர்களைப் பற்றிய நினைப்பு தாயின் நினைப்பைக் கவர்ந்திருக்க வேண்டும். இனியுண்டாம் சிசுவுக்குத் தான் தெரிந்தெடுத்துக் காண்ட விர்த்தியில் பேர்போன முக்கியஸ்தர்களைப் பற்றித் தாயானவள் நினைவு கூர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.
ன்
சிசுவின் நலத்தைப்பற்றித் தான்செய்து கொள்ள வேண்டிய தற்போதனைக்காலம், படுக்கைக்குப்போகுஞ் சமயமே ஐந்து முதல் பத்து நிமிஷம் வரை தன் தேஜசனுடன் பேசுவதே போதுமானது. அக்காலத்தில் தன் அங்கங்கள் யாவையும் தளர்வுறும்படி செய்து கொண்டும் ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டும் மனத்தில் கிஞ்சித்தும் பயம் கவலை ஏதொன்றுமில்லாமல் செய்து கொள்ளவேண்டும்.
தற்போதனை செய்யத் தொடங்குமுன் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் பலவற்றில் ஒன்றாவது அன்று சென்ற நாளைப் பின்னோக்காய்ப் பார்த்து, மட்டுக்கடங்கா உழைப்பில்
L