பக்கம்:மறைமலையம் 15.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* முன்பனிக்கால உபந்நியாசம்

275

ஒழிந்துபோகும். போகா தென்பதற்கு யாதொரு நியாயமும் காணோம்.

மற்றவர்களைப் பார்க்கிலும் அதிக நுட்பவுணர்ச்சிக் குள்ளானோருக்குக் கூச்சம் நலஞ்செய்யும். ஏனெனில் இவ்வுணர்ச்சி சன்மார்க்க நெறிக்கு அநுகூலமானது. இவர் களுடைய தேஜசன் அதிகமாகப் பக்குவப்பட்ட தன்மை யிலுள்ளது; ஞானசம்பத்துக்குரியது. இக்குணம் தங்களுக்கு இயற்கையாய் அமைந்ததினால், கூச்சத்திற் குள்ளாக வேண்டி யிருக்கிறதே என்று இலேசாய் எண்ணி விடாமல் தங்களுக்கு நல்வரப்பிரசாதமாய் அமைந்த தென்றெண்ணி நற்கதி பெறும் விஷயங்களுக்குப் பயன் படும்படி செய்து கொள்ள வேண்டும்.

தன்னிலுள்ள பயம் சிசுவின் சரியானவளர்ச்சிக்கு இன்னொரு தடையாகும். ஆகையால் எவ்விதப்பயத்திற்கும் தானுள்ளாகாமலிருக்கும்படி பலப்படுத்திக்

தன்னைப்

காள்ளக்கடவள். விசேஷமாகத் தனக்கினிநேரப்போகும் பிரசவத்தைப் பற்றிய பயத்தை முற்றும் அகற்றவேண்டும். இதை எவ்வளவு சீக்கிரம் தொலைக்கிறாளோ அவ்வளவுக்கு நல்லது. தான் பெறப்போகும் சிசுவை அரைமனதுடன் வரவேற்பது அல்லது அச்சிசு ஏன்வருகிறதோ வென்கிற வெறுப்புடன் பெறுவதைவிடப் பெறாமலிருப்பதே மேலாகும். சிசுவின் பிரசவத்தால் தனக்கொரு கெடுதி நேரிடாதென்கிற தன்னம்பிக்கையின் பொருட்டுத் தற்போதனை செய்து கொள்ளவேண்டும். அப்படிச் செய்வதினால் அச்சம் நீங்கும்.

நாளை “நான் எதைப்பற்றியும் அச்சங்கொள்ளேன். இனி வரப்போவதைப் பற்றி வீண்கவலை கொள்வதில் காலங் கழியேன். உலகத்திற்குத் தூதனொருவனைக் கொடுப் பதில் யாதொரு துன்பத்தையும் கடவுள் உண்டாக்கார். சுவாசம் விடுவது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபமாயும் துன்பமில்லாமலும் சிசுபிறக்கும்.” என்பதான தற்போதனை செய்துகொள்ளவேண்டும்.

க்கடைசி தற்போதனை சிசு பிறப்பதற்குக் குறைந்தது ரண்டு மாதத்திற்கு முந்தியே ஆரம்பமாகவேண்டும். தாய்

அச்சங்

காண்டிருந்ததினாலாவது மனவெறுப்புட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/308&oldid=1583372" இலிருந்து மீள்விக்கப்பட்டது