பக்கம்:மறைமலையம் 15.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

277

ஆடவர்களை விட மகளிர்க்குச் சுயவறிவு (Intuition) அதிகமென்று சொல்லப்படுகிறது. அவ்வறிவு நாம் நடந்து கொள்வதற்கு நல்வழிகாட்டி யென்றும் எண்ணப் படுகின்றது. அச்சுயவறிவில் சிறிது தேவாம்சம் உண்டு. தாயானவள் இதை யூகமாய் உபயோகப்படுத்தினால் தாயும் திடம் பெறலாம்; வரும் சிசுவும் நலம் பெறலாம்.

இராஜாதி ராஜனான சர்வேசன் தன்னை உலகிற்கு நல்ல நூதனை நல்கும்படி விசேஷவிதியாய் நியமித்தாரென்றுணர்ந்து, அச்சிசு வெளிவர உலக கபாடங்களைத் தட்டுகையில் தான் பேர் உவகையெய்தினவளாய் இருக்க இருக்க வேண்டும். தாய் கொள்ளும் சந்தோஷம் எதுபோன்றிருக்க வேண்டுமென்றால், என்னிடத்திற்கு வரும்படி சிறுவர் சிறுமிகளை விடுங்கள். அவர்களுக்கு யாதொரு தடையுஞ் செய்யாதீர்கள். அவர்களது போன்றதே தெய்வ அரசு” என்று திருவாய் மலர்ந்தருளிய பெரியோர் கொண்ட உலகை ஒத்திருக்க வேண்டும், தாய்கொள்ளும் உலகம்.

66

எம்.ஏ. ஜெயராம் பிள்ளை

முன்பனிக்கால உபந்நியாசம்

- முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/310&oldid=1583374" இலிருந்து மீள்விக்கப்பட்டது