பக்கம்:மறைமலையம் 15.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைலையடிகளைப் போன்ற பேராசிரியர்கள் இனித் தமிழ்நாட்டில் தோன்றுவது மிகமிக அருமை என்றே சொல்ல லாம். உயர்ந்த குறிக்கோளும், சீரிய தமிழ்ப் பண்பும், ஆழ்ந் தகன்று நுணுகிய தமிழாராய்ச்சியும், சைவ ஒழுக்கமும், சைவ சமயப் பற்றும், சைவ நூல்களின் தெளிந்த உணர்ச்சியும் அவர் பால் நான் கண்டது போல வேறு எவரிடத்திலும் கண்டதில்லை. அவர்களுடைய பேச்சின் இனிமையும், வன்மையும், எழுத்தின் அழகும் வன்மையும் தமிழ் மக்களை வசீகரித்து வந்தன என்பது யாவரும் அறிந்த ஓர் உண்மையே.

- எஸ். வையாபுரிப் பிள்ளை

மறைமலையடிகள் ஒரு தவப்புத்திரர். அவர் தமிழுக்குச் செய்த தொண்டு அளவற்றது. தமிழ் மொழி மாத்திரமல்லாமல் வடமொழி, ஆங்கிலம் மூன்றும் தெளிந்து சிந்தித்துச் சீர்தூக்கி ஆராய்ந்த பேரறிஞர்.

- ஜே. சிவசண்முகம் பிள்ளை

உழை

உயர்

உதவு

2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

600 017

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/322&oldid=1583386" இலிருந்து மீள்விக்கப்பட்டது