பக்கம்:மறைமலையம் 15.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

❖ - 15❖ மறைமலையம் - 15

பரமான்மாவை யொழித்து

அவ்விலக்கணந் தீண்டப்

பெறுகின்ற சீவான்மா ஒன்றே காலபேதம் அவசரபேதம் உடையதென்று துணியப் படும்.'

இ இனி ஏகான்ம வாதஞ் சாதிப்பார் மதம்பற்றிக் கடங்க டோறும் உள்ள, சலத்தின் கண்ணே தோன்றுஞ் சந்திர விம்பம் சலத்தின் அசைவாற்றானும் அசைவது போற் றோன்றினும் உண்மையாக நோக்குமிடத்து அச்சலனம் அதற்கு இல்லாமை போலச் சரீரங்கடோறும் பிரதிபலிக் கின்ற சிற்பிரமத்தின் விம்பமாகிய ஆன்மாப் பஞ்சேந்திரியங் களாற் சலனமுறுவது போற்றோன்றினும் அஃதியற் கையில் அங்ஙனம் சலிப்புறு வதில்லை யென்று உரையாமோ வெனின்;--அது பொருந்தாது. எம்முடைய சரீரத்திலுள்ள சோத்திரம் தொக்கு சட்சுசிங்குவை ஆக்கிராணம் என்னும் அப்பஞ்சேந்திரியங்களும் பிறிதொன்றன் உதவியை வேண்டாது தாமே இயங்குவனவாயின் அவை எப்போதுஞ் சலித்துக் கொண்டே யிருத்தல் வேண்டும்; சாக்கிரத் திலன்றிச் சொப்பணம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னுங் கேவலாவத்தை நான்கினும் அவை யியக்கமின்றிக் கிடத்த லானும், இனிச் சாக்கிரத்திலேயும் அவை இயங்குங் காலத்து ஐந்தும் ஒருகாலத்து ஒருபொருளை விடயிக்க மாட்டா என்பது அழகிய வோர் பொருளை உற்றுக் காணு மிடத்துச் செவியொன்றைக் கேளாமையினும் இனிய ஓர் சங்கீத சையைக் கேட்டு அறிவு அதன் வசப்பட்டு நின்றுழிக் கண் ஒன்றைக் காணாமையினும் வைத்து அறியக் கிடத்த லானும், இனி யிப்பஞ்சேந்திரியங்கள் ஐந்தினும் பற்றறப் பிரிந்து மனம் ஒன்றை நாடும் வழி அவை இயங்காது கிடத்த லானும் அவ்வைந்துந் தாமே இயங்கப் பிரம பிரதிபலன் சீவான் மாச் சலனமின்றி யிருக்குமென்று உரைத்தல் ஏலாதென்க. சீவான்மா மனத்தைப் பற்ற மனம் இந்திரியங்களைப் பற்ற இந்திரியங்கள் நடைபெறுகின்றன என்பதே உண்மையாம். இஃது அருணந்தி

சிவாசாரிய சுவாமிகள்

66

“அறிவதைம்பொறியே யென்னின் உறக்கத்தினறியாவாகும் அறிவது மொன்றொன்றாக வொன்றொன்றாயறிவதென்னின் அறிவுகள் ஒன்றை யொன்றங்கறிந்திடா வைந்தையுங்கொண் டறிவ தொன்றுண்ட தான்மா வைம்பொறி யறிந்திடாவே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/41&oldid=1583093" இலிருந்து மீள்விக்கப்பட்டது