பக்கம்:மறைமலையம் 15.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

❖ 15❖ மறைமலையம் – 15

“செவிக்குண வில்லாத போது சிறிது

வயிற்றுக்கு மீயப்படும்”

என்று திருவாய் மலர்ந்தருளினார்.

(குறள் 412)

அற்றேல், இப்பஞ்சேந்திரிய வுணர்வின் வழிப்பட்ட ஆன்மாவின் அவசர பேதங்களை யெல்லாம் சமயங்கள், மதங்கள் என்று வழங்காமை என்னையோவெனின்;--

“வளத்திடைமுற்றத் தோர்மாநிலமுற்றுங்

குளத்தின் மண்கொண்டு குயவன்வனைந்தான்

குடமுடைந்தாலவை யோடென்று வைப்பர்

உடலுடைந்தா லிறைப்போதும் வையாரே”

எனவும்

“எரியெனக் கென்னும் புழுவோ வெனக் கென்னு மிந்த மண்ணுஞ் சரியெனக் கென்னும் பருந்தோ வெனக் கென்னுந் தான்புசித்த

சரியெனக் கென்னும் புன் னாயெனக் கென்னு மிந்நாறுடலைப் பிரியமுடன் வளர்த்தே னிதனாலென்ன பேறெனக்கே”

“முடிசார்ந்த மன்னரு மற்றுமுள்ளோரு முடிவிலொரு பிடிசாம்பராய் வெந்து’

எனவும்

எனவும்

எழுந்த திருவாக்குகளின்படியே இன்னகணத்தில் மாய்வ தென்றறியப்படாத வண்ணம் சடுதியிலே மாய்ந் தொழியும் இம்மனித சரீரத்தோடு, அப் பஞ்சேந்திரிய இன்பானுபவங் களும் இறந்தொழியக் காண்கின்றமை யாலும், இங்ஙனம் இடையிடையே யழிந்தொழியும் அவ்வின்பானுபவங் கள் சீவான்மாவினைக் கடைத்தேற்று தற்கு ஒரு சிறிதும் பயன்படா மையானும் அவற்றை யெல்லாம் வெறுத்துப் பகிர் முகமாகச் செல்லும் நம் ஆன்ம அறிவினை அந்தர் முகமாக உள்ளிழுத்து 'நானா ரென்னுள்ளமார் ஞானங்களா ரென்னை யாரறி வார்” என்ற அருமைத் திருவாக்கின்படி ஆ! நான் யார்?

66

த பேதங் களோடு அதிவிசித்திரமாய் அமைந்திருக்கும் இப்பிரபஞ் சங்கள் யாவை? இவற்றிடையில் யான் வந்து பிறந்ததேன்? பிறந்துபல வகைத் துன்பங் களை அனுபவித்து மிக வருந்தும் போதும் அவற்றை யிடை யிடையே மறந்து நான் எப்போதும் இவ் வுலகத்திற் சாசுவதமாய் இருப்பது போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/43&oldid=1583095" இலிருந்து மீள்விக்கப்பட்டது