பக்கம்:மறைமலையம் 15.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

11

நினைப்பதேன்? என்மனைவி, மக்கள், சுற்றத்தார், பிறர் என்னுமிவர்க்கும் எனக்குமுள்ள சம்பந்தம் என்னை? மற்றை யோரிடத்திலெல்லாம் யான் அன்புடையனாய் ஒழுகாது என் மனைவி, மக்களிடத்தே மாத்திரம் யான் அளவிறந்த அன்பு பூண்டு ஒழுகுவது என்ன அறியாமை? யான் இறக்குங் காலத்து அவர் அவ்விறப்பினை நீக்குவரா? யான் பிறக்குங்காலத்து அவர் அப்பிறப்பினை நீக்குவரா? யான் துன்புறுங்காலத்து அவர் அத்துன்பத்ைைத நீக்குவரா? இவர்களெல்லாம் அந்தோ! எம்மைப்போலவே துன்புறுகின்றார்கள், பிறக்கின்றார்கள், இறக்கின்றார்கள்; சாவார்க்குச் சாவாரும், துன்புறுவார்க்குத் துன்புறுவாரும் துணையாவதி யாங்ஙனம்? ஐயோ! இப்பிறப்பினுந் துன்பத்தினும் எவ்வாறு நீங்குவேன்! இறக்க வேண்டுமே என்பதனை நினைக்குங் காலத்து என்னெஞ்சம் பகீரென்று துணுக்குறு கின்றதே!

“யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென் கடவேன் என்ற மேலோர் திருவாக்கு இடையறாது என்னுள்ளத்திற் றோன்றி என்னை வருத்துகின்றதே! என்று இப்படி யெல்லாம் ஆன்மவறிவானது உள்மடங்கிப் பஞ்சேந்திரிய சேட்டை யெல்லாம் ஒடுக்கிக் கொண்டு சிந்தனை செய்யும் அவசரந்தான் ஆன்மாக்களுக்கு என்றும் மாறாது நிகழும் சமயமாதலின் ம்மானசிக அவசரமே சமயம் அல்லது மதம் என்று ஆன்றோரான் வழங்கப்பட்டது.

என் அருமைச் சகோதரர்களே! திராவிடமேன் மக்களே!

முன்னே காட்டியபடி எப்படியானால் நமது ஆன்ம ஞானமானது பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டு நடைபெறுங் காலத்து அதுவதுவாய் நின்று விஷயங்களைப் புசித்துத்தான் மிக விரும்பிய தொன்றனை அபிமானத்தால் உயர்த்துப் பேசுதல் போல, நமது மானசிக தர்மத்தால் பரிசீலனஞ் செய்யப் படுகின்ற தத்துவ விசாரணைகளும் பல திறப்படுகின்றன. அறிவு நிரம்ப வில்லாது தாழ்ந்த பக்குவத்தின் கண்ணராய் நிற்கின்ற ஆன்மாக்கள் தத்துவங் களைப் பிரித்துப் பிரித்து ஆயும்போது அவர்கள் அறிவு மேற்பட்ட தத்துவங்களிற் பிரவேசியாமை யால் தமக்குத் துணையாவன பிருதிவி அப்புத்தேயு வாயுக்களே யாமென்றும், இந்நாற்பூதக் கூட்டத்தினாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/44&oldid=1583096" இலிருந்து மீள்விக்கப்பட்டது