பக்கம்:மறைமலையம் 15.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

❖ - 15❖ மறைமலையம் – 15

றோன்றிய அண்டாமாகிய இப்பிரபஞ்சமும் பிண்டமாகிய இச்சரீரமுமே மெய்யென்றும் நிச்சயித்தலி னால் உலகாயத மதம் தோன்றுவ தாயிற்று. இவ்வாறே இவர்க்கு மேற்பட்ட பக்குவத்தினை யுடையாரால் இந்திரியான்ம வாதமும் இவர்க்கு மேற்பட்ட பக்குவத்தினை யுடையாரால் அந்தக் கரணான்மவாதமும், இவர்க்கும் மேற் பட்டாராற் பிராணான்ம வாதமும், இவர்க்கும் மேற் பட்டாரால் விஞ்ஞானான்ம வாதமும் இவர்க்கும் மேற் பட்டாராற் சீவப்பிரமவாதமு மெனப் பலப்பலவான மதங்களும், பலப் பலவான தத்துவ விசாரணைகளும் பலதிறப்பட்டுத் தோன்றின. இவற்றுள் ஒன்றே மெய்ந் நிலையாய்ப் பெறப்படுமாயினும் ஏனைய வல்லாம் பொய்யென்று கழிக்கப்படாமல் அம்மெய்ந் நிலையினைப் பயப்பதற்குரிய சோபான நிலைகளாய் நிலை பெறுவனவாம். முன்னே காட்டிய வண்ணம் எப்படியானால் சத்தப் பரிசரூபரச கந்தம் என்னும் பஞ்சேந்திரிய வுணர்வுகளுள் சத்தவுணர்வே ஏனை எல்லாவற்றினும் மிகச் சிறந்ததாயினும் அவை யொவ் வொன்றும் ஏனையதன் வளர்ச்சிக்குக் காரணமாய்ப் பயன்படுதல் போலவும், மனிதப் பிறவியினுள் குழவிப்பருவம் பாலப்பருவம் மனிதப்பருவம் விருத்தப் பருவம் என்பன வற்றுள் விருத்தப்பருவமே அறிவு மிகச் சிறந்ததாயினும் அதனை எய்துதற்கு ஏனைமூன்று பருவங்களும் ஒன்றற் கொன்றுபகாரமாய் இன்றியமையாது வேண்டப் படுதல் போலவும், மெய்ந்நிலைச் சித்தாந்தமாய் முடிக்கப்படும் ஒரு மெய்ச் சமயத்தினைச் சென்றடைதற் குரிய பேரறிவினைப் பெறுதற் பொருட்டு மிகத் தாழ்ந்த பக்குவத்திலே தோன்றிய சிற்றறிவுச்சமய முதலிய எல்லாம் ஒன்றற்கொன் றுபகாரமாய் மிகுதியும் பயன்படுதலுடையன வாம். ஈசுரனும் ஆன்மாவும் இல்லையென்று சொல்லுகிற நாத்திகமத முதற்கொண்டு பரம வேதாந்த சித்தாந்த முடிநிலைச் சமரசானுபவ நிலையாயுள்ள மெய்ச்சமயங் காறுமுள்ள சருவ ஆன்மாக்கட்கும் ஈசுரனது அனுக்கிரகப் பேறு உண்டென்பது துணிபொருளாம். இது திராவிட சுருதியுள்,

66

'விரிவிலா வறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற் கேற்றதாமே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/45&oldid=1583097" இலிருந்து மீள்விக்கப்பட்டது