பக்கம்:மறைமலையம் 15.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

13

என்று பெறப்பட்டமையாலும், திராவிட ஆகம சித்தாந் தத்துள்,

அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொரு ளாய்” என்று வலியுறுத்தப்பட்டமையானும் இனிது விளங்கும்.

இனி இப்பெற்றிப்பட்டதத்துவ விசாரணையின் அவசர பேதங்களையெல்லாம் கடந்து மேல் நிலைக் கண்ணே சென் றானுக்குக் கீழ் நிலைக்கண்ணுள்ளன வெல்லாம் பொருளல்லன வாய்த் தோன்றுமாகலின் அதுபற்றி அவன் அவமதிக்கப் படுவானல்லன். அந்த மேனிலைக் கண்ணே நின்று பேரின் பானுபவத்தை நுகர்ந்து கொண்டு,

“சோம்பரிருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பது சுத்த வொளியிலே

சோம்பர் கண்டாரச் சுருதிகட் டூக்கமே"

சோம்பருணர்வு சுருதி முடிந்திடஞ்

என்றபடி எவ்வகைச்

செயலுமில்லாத சுத்த சோம்பராய்,

“பூதமுங் கரணம் பொறிகளைம் புலனும் பொருந்திய

குணங்களோர் மூன்றும்

நாதமுங் கடந்த வெளியிலே நீயு நானுமாய் நிற்குநாள் உளதோ வாதமுஞ் சமயபேதமும் கடந்த மனோலயவின் பசாகரனே ஏதுமொன்றில் லேன்யாது நின்செயலே யிறைவனே

ஏகநாயகனே”

என்ற வண்ணம் எல்லாம் இறைவன் செயலே தஞ் செயலாய்க் கொண்டாராய் உள்ள பிரமஞானிகளுக்கு ஏனைய வெல்லாம் வெறும் போலிகளாய் ஒழிதல் பொருத்தமேயாம். அங்ஙனம் அவர்க்குத் தோன்றுதல் பற்றி அவர் மற்றைச் சமயங்களை இகழ்ந்தார் எனத் திரித்துணர்ந்து அவரைப் புறம் பழித்தல் பொருந்தாதாம். அது நிற்க.

இனி இங்ஙனம் ஆன்மஞான அவசர பேதங்களாய்த் தோன்றிப் பல்வகைச் சமயங்களுட் பிரதமத்தில் விசாரணை செய்தற் பொருட்டெடுத்துக் கொண்ட சைவம் என்பது அதிதீவிர பக்குவத்தினையுடைய ஓரான்மாவானது தன் ஏகதேச வியாபக சீவலக்கணத்தை விட்டுப் பெருவியாபகத்த தாய் நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/46&oldid=1583098" இலிருந்து மீள்விக்கப்பட்டது