பக்கம்:மறைமலையம் 15.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மறைமலையம் - 15

சிவம் என்னும் முழுமுதற் பரம் பொருளைத் தலைப்பட்டு நின்ற அவசரமாம். இது

"தெய்வஞ் சிவனே சிவனருள் சமயஞ் சைவஞ் சிவத்தொடு சம்பந்தமென்றான் சைவம் வளர்க்குஞ் சம்பந்த மூர்த்தி”

என்ற திருவாக்கான் அறியற்பாலதாம். இங்கே சிவம் என்று பிரதிபாதிக்கப்பட்ட பொருள் அசுத்தமாயையிற் றோன்றிய சத்துவம், இராசதம், தாமதம் என்னும் முக்குண வயப்பட்ட மும்மூர்த்திகளுள் ஒருவன் அல்லன் அது,

“అవస్తోత్రితమాతీతం తురీయం సత్వచిత్సుఖం”

என்றும்

61Gör M|Li ఈశానం పరమం విద్యాత్ప్రేరకం

என்றும் போந்த பஞ்ச பிராமண சுருதியானும், “தேவர் கோவறியாத தேவதேவன்” என்னுந் திருவாசகச் சுருதி யானும் அறியற்பாலதாம். இன்னுமிது.

"சிவனொடொக்குந் தெய்வம் தேடினு மில்லை' என்னுந் திருமந்திரத்தானும் உணரப்படும். சிவம், பிரமம், கந்தழி யென்பன ஒரு பொருட்கிளவிகள். இவற்றுட் கந்தழி என்பது ஆசிரியர் தொல்காப்பியனாராற் சிவம் என்பதற்குப் பிரதி பதமாக வைத்துக்

“கொடிநிலை கந்தழி வள்ளியென்ற

வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே"

(தொல்- பொருள் - 88)

என்று திருவாய் மலர்ந்தருளப்பட்டது. இதற்குரை கண்ட பேரறிவாளரும்,

“பச்சை மாலனைய மேகம் பௌவ நீர்பருகிக்கான்ற

எச்சினாற்றிசையு முண்ணுமமிழ் தெனவெழுநா வெச்சில் மெய்ச்சி நாணாளும் விண்ணோர் மிசைகுவர் வேதபோதன் நச்சினார்க் கினிய னெச்சில் நறுந்தமிழ் நுகர்வர் நல்லோர்"

என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/47&oldid=1583099" இலிருந்து மீள்விக்கப்பட்டது