பக்கம்:மறைமலையம் 15.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக்கால உபந்நியாசம்

17

நிற்பினும் இதனாற் சிறிதும் விகாரமுறுத்தப் படுவானல்லன். அது ‘நறுமலரெழுதரு நாற்றம்போல்' என்னும் உவமையால் விளக்கப்படுகின்றது. மலர் முகையாய் இருந்துழி அதனுள் அருவாய் இருந்தமணம் அது பருவ முதிர்ந்து மலர்ந்த விடத்து அதனுள்ளும் புறம்புமாய்ப் புலப்பட்டு வியாபித்துத் தான் மலரைப் பற்றிக்கொண்டு நிற்பினும் தான் அம்மலரால் பற்றப்படாது அதனையுங் கடந்து வியாபித்துத் தன் வியாபகத்தினுள்ளே அம்மலரையும் ஏகதேசமாய் அடக்கிக் கொண்டு பேதமும் அபேதமுமாகிய பேதாபேத விலக்கணத் தோடு அதிற் சிறிதும் தாக்கின்றி நிற்றல்போல, இறைவன் ஆணவமலவயப்பட்டுக் குவிந்து நின்ற ஆன்மாவினுள்ளே அருவாய் இருந்து பின் அம்மலத்தடை நீங்கி அது விரிந்த வழி அப்பரமான்மசைதன்னியம் அதன் உள்ளும் புறம்பு மாய்ப் புலப்பட்டு விளங்கித்தான் அம்முத்தான் மாவைப் பற்றி நிற்பினும் தான் அதனாற் சிறிதும் பற்றப்படாது அதனையுங் கடந்து வியாபித்துத் தனது சிதாகாச வியாபகத் திலே அவ்வான் மாவினையும் ஏகதேசமாய் அடக்கிக் கொண்டு பேதமுமாய் அபேதமுமாய்ப் பேதாபேத வியைபுற்று அதிற் சிறிதும் தாக்கின்றி நிற்குமென்க. இங்ஙனம் அசேதனம் சேதனம் என்னும் இருவகைப் பிரபஞ்சத்தினும் பேதாபேத மாகவும் அருவுருவமாகவும் தன்னியல்பிற் சிறிதும் திரிவின்றித் தானேயாய் நிற்கும் இறைவனியல்பை இவ்வுண்மைத் திருவாக்கு ‘உற்றவாக் கையிலுறு பொருள் நறுமல ரெழுதரு நாற்றம்போற் பற்றலா வதோர் நிலையிலாப் பரம்பொருள்' என்று இனிது விளக்கினமையும் இவ்வுண்மை யினை ஆசிரியர் நச்சினார்க் கினியர் காட்டினமையும் பெரிதும் நினைவுகூரற் பாலன வாம். இவ்வுண்மை,

“பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ஓவியம்போல வுணர்ந்தறிவாளர்க்கு நாவியணைந்த நடுத்தறியாமே”

என்ற திருவாக்கானும் விளக்கப் பட்டமைகாண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/50&oldid=1583102" இலிருந்து மீள்விக்கப்பட்டது