முன்பனிக்கால உபந்நியாசம்
21
திருப்பதிகங்கள் கட்டளையிட்டு வைதிக வழியை விளக்கி யருளினார், மெய்கண்ட தேவர் தாமும் மூன்றாம் ஆண்டிலே சாத்திர ரூபமான சிவஞானபோதங் கட்டளையிட்டு ஆகமவழியை விளக்கி யருளினார். வேதம் சூத்திரம் போலப் பொருட் சுருக்கமுடைத்தாய்ப் பொதுவுற நிற்பது, ஆகமம். அச்சூத்திரத்திற்குரைபோலப் பொருட் பெருக்க முடைத்தாய்ச் சிறந்து நிற்பது. இது,
CC
'வேதமொ டாகமம்' என்னுந் திருமந்திரத்தானும் உணரப் படும். அவை யவ்வாறிரண்டா யிருப்பினும் பொருள் முடிபால் ஒன்றே யாமென்பது சைவ பாஷியகாரரான ஸ்ரீ நீலகண்டர் " என்றுரைத்த వయంతు వేద శివాగమయో ర్భేత மையால் விளங்கும். இது போல, ஞானசம்பந்தர் திருவாக்கான வேதமும் மெய்கண்டதேவர் திருவாக்கான சிவஞான போதமும் போதித்த முறையால் இரு திறப்படினும் பொருள் முறையால் ஒன்றென்பது பெறப் படுமென்க. அது நிற்க. அவ்விருவருங் குழந்தையாயிருந்த பருவத்திலே திரவிட வேதமும் திரவிட ஆகமமும் தோன்றி முறைமை அதி ரகசியார்த்தங்களை உள்ளடக்கி நிற்கின்றது. காம, வெகுளி, மயக்க மென்னும் திரிமல வலியுஞ், சிறிதுந் தோன்றப்பெறாத பருவங் குழந்தைப் பருவமேயாம். அப்பருவ மொன்றே அத பரிசுத்தமான திரவிட வேத சிவாகமங்கள் தோன்றுதற்குரிய தாகலின் அப்பருவத்திலே அவர்க்கு அவை தோன்றுவவாயின. இன்னும் அவர்க்கு மூன்றாம் ஆண்டிலே அவை தோன்றின என்பதனால் பதி,பசு,பாசம் என்னும் மூன்றிற் பசுபாச நிலைகழன்று பதிநிலையில் நின்றபொழுது அப்பதி வாக்கியங்கள் தோன்றின வென்றும், அவர் அப்போது சத்துவம், இராசதம், தாமதம் என்னும் முக் குணங்களிற் றாமத இராசதங்களைக் கடந்து சுத்த சத்துவத்திலே நின்றனரென்றும், சுத்தம், அசுத்தம், சுத்தா சுத்தம் என்னும் மும்மாயையுட் பின்னிரண் டனையுங் கழித்துச் சுத்தமாயையிலே நின்றன ரென்றும் அறியப்படும். இன்னும் ஞானசம்பந்தப் பிள்ளை யார்க்குப் பரமேசுவரர் பார்வதி சமேதராய் எதிர்தோன்றிப் பிள்ளையார்க்கு அழுகைதீர்ப்ப அம்மையார் அருளைத் திருமுலைப்பாலைப் பிள்ளையார்க்கு ஊட்டினார் என்பத னால், சத்திசிவத்தைத் தியானிக்கும் உறைப்பினாலே பாம்பு மண்டலித்தாற் போலச் சுரித்துக்