பக்கம்:மறைமலையம் 15.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

❖ - 15❖ மறைமலையம் - 15

யன்னுங் குண்ட

லி

கொண்டிருக்கின்ற சுத்தமாயை க சத்தியானது சிவாக்கினியாற் கண்விழித்து நாததத்துவத்தின் மேற்கண்ணதான அமிழ்த தாரையைச் சென்றுபற்ற அப்போது ஒழுகும் அவ்வமிழ்தத் தாரையினைப்

பருகிச் சுத்த சிவானந்தத்திலே நிருவிகற்ப நிருவிகற்ப சமாதிகூடி நிற்கு மாறு உணர்த்தப்பட்டபடியாம். எதிர்தோன்றிய உமா மகேசுரரே படியாம்.எதிர்தோன்றிய தியானிக்கப்படும் சத்தி சிவமாம். அத்தி யானவுறைப்பின்கட் டோன்றும் சிவாக்கினியே பொற் பிரகாசமாம்; பொன் அக்கினியின் கூறென்பது தருக்க சாத்திரியாராகிய அன்னம் பட்டர்க்கும் உடன்பாடு. அப்பொற் பிரகாசத்தோடு கூடிய கிண்ணத்தின் வட்டவாய் வடிவே மண்டலித்திருக்கும் குண்டலி சத்தியாம். அக் கிண்ணத்திற் கறந்தூட்டப்பட்ட திருமுலைப் பாலே நாததத்துவத்தின் மேற்கண்ணதான சந்திர மண்டலத் தினின்றுருகி ஒழுகும் சிவானந்தஅமிழ்தத் தாரையாம். அவ் வமிழ்த தாரையைப் பருகித் தசநாடியினும் பூரிப்பவே தச நாதங்களுங் கேட்குமாகலின் அத்தசநாத சொரூபமே ஞானசம்பந்தப் பிள்ளையார் அருமைத் திருவாய் மலர்ந் தருளிய திருப்பதிகங்களாம். அசுத்தமாயையிற் றோன்றும் அசுத்த வர்ண ரூபமான மற்றையோர் வாக்குப் போலாது, ஞானசம்பந்தப் பிள்ளையார் திருவாக்குகள் பரவயிந்து வத்தின் கண்ணே தோன்றிய பிரணவ விகாசமாகும். இதனை அறிவித்தற் பொருட்டே பிள்ளையார் தம்முடைய முதற் பதிகத்திலே 'தோடு டைய செவியன்' என்று கட்ட கட்டளை யிட்டு முதற்கண்ணே பிரண வத்தை நிறுத்தி யருளினார். இவ்வாறே மெய்கண்டதேவர் தம் சிவஞானபோதத் திருவாக்குஞ் சுத்தவயிந்தவத்திற் றோன்றிய பரநாத வொலிகளாம். இன்னும் இவற்றின் நுட்பங்களெல்லாம் ஞானக்குரவனை யடைந்து அவனறிவுறுக்கும் உபதேச வாயிலான் அறியற்பாலன வாகலின் அவற்றை யினி இங்கு விரியாது விடுக்கின்றார்.

6

துகாறும் உபந்நியசித்தமையால் முதலிற் சைவ மென்பது யாது என்று விசாரிக்கப் புகுந்து சமயஞானம் என்பது அழிந்து போகும் திரவியம் போலாது அழியாத் திரவியமாய் எல்லாச் சீவர்களுக்கும் தொன்று தொட்டே உள்ளத்திற் பதிந்திருக்கின்ற தென்பதும், சமயம் என்பது பொழுது, காலம், அவசரம் என்று பொருள் படுவதாகலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/55&oldid=1583107" இலிருந்து மீள்விக்கப்பட்டது