முன்பனிக்கால உபந்நியாசம்
23
க்காலத்தினாலும் இடத்தினாலும் வரையறுக்கப்படுதல் ஏகதேசவியாபகமுடைய சீவான்மாவுக்கன்றிப் பரமான்மா வுக்கு இல்லையென்பதும், சீவான்மா பரமான்மாவென இரண்டில்லை பரமான்மாவே பஞ்சேந்திரிய சலனத்தாற் சீவான்மாப்போலத் தோன்றுகின்ற தென்று கூறும் ஏகான்ம வாதவுரை சீவ சீவ ஆன்மாவின் அறிவின் சையோகமின்றி இந்திரியங்கள் இயங்க மாட்டா என்று காட்டப்படுவதனால் மறுக்கப்படுதலின் அது பொருந்தா தென்பதும், இங்ஙனஞ் சீவான்மா பஞ்சேந்திரியங்கள் வாயிலாய் விடயிக்குங்காலங் களெல்லாம் அதற்குத் தனித் தனியே ஒவ்வோர் அவசரங் களாமென்பதும், அங்ஙனம் விடயிக்கும் வழியும் சீவான் மாவிற்கு யாதானுமோர் இந்திரியத்தின் வழிவரும் இன்பத்தி லேயே பிரியம் மிக்குப் படுமென்பதும், அங்ஙனமெல்லாம் மிக்குச் செல்லுகின்ற ஆன்மாவின் அவசர பேதங்களைச் சமயங்கள் என்று வழங்காமை அவை சரீரத்தோடு அழிதலி னாலேயாமென்பதும், அந்தர் முகமாகச் செல்லும் மானசிக விசாரணையே சமயமாவதற்குரியதா மென்பதும், அவ்வாறு செய்யப்படும் அந்தர் முக மானசிக விசாரணையும் பலதிறப் படுகின்றன வென்பதும், அவையே உலகாயதம் முதலிய பெயர்களான் வழங்கப்பட்டன வென்பதும்; அவை யொவ் வொன்றும் உபகாரமுடையனவே யல்லது பயனற்றனவாகா வென்பதும், இதுவே முடிநிலை யிலுள்ள சைவத்தின் சமரச உண்மையாமென்பதும், அம் முடிநிலைக்கண் உள்ளார்க்குக் கீழ் நிலைகளினுள்ளன போலியாகத் தோன்றுதல் குற்றமாகா தென்பதும், இனிச் சைவமென்பது சிவசம்பந்த முடைய தென்பதும் சிவமென்பது தொல் காப்பியர் நச்சினார்க் கினியர் ஸ்ரீமந் மணிவாசகப் பெருமான் முதலிய பேரறி வாளரால் விளக்கப்பட்ட தத்துவங் கடந்த அருவப் பொருளா மென்பதும், இத்தகைய பரப்பிரமப் பொருளை விசாரித்த அவசரமே சைவசமயமா மென்பதும், அப்பரப் பிரமப் பொருளைச் சிவம் என்று வழங்குதலே வேதாகம முதலிய தொன்னூற் கருத்தா மென்பதும், இப்பெற்றியதான அப் பரப்பிரம சொரூபத்தை ஒரோவொரு கால் வேறுவேறு பெயரிட்டு வழங்கினும் அது சைவத்திற்கு இழுக்காவதில்லை யென்பதும், இங்ஙனஞ் சமரச வுண்மையும் சீவகாருணியமும்
இனி